வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (11/07/2018)
"ஒன்றி ஒன்றி நின்று அறிவைப் பழக்க உறுதி, நுட்பம், சக்தி இவை அதிகமாகும்."
-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
ஒரு பொருளின் மீதோ, உணவின் மீதோ, ஒரு நபரின் மீதோ, ஒரு குழந்தையின் மீதோ ஒருவருக்கு பற்றுதல் அதிகமாகும் போது அதுவே எதிர்பார்ப்புடன பந்தம் பாசம் பற்றுதல் அதிகம் ஆகிறது.
அதுவே அப்பொருளை, அச்செயலை நினைக்கவும், அனுபவிக்கவும், செய்யத் தூண்டுகிறது.
(உ-ம்) அலைபேசியை எடுத்துக் கொள்வோம்.
சிறிது நேரம் கீழே வைக்க மனம் வருகிறதா??
இணையதளம் வந்தாலும் வந்தது அதில் நிறைய நல்ல செய்திகளும் மற்றயவையும் வருகிறது..
யார் யாருக்கு எது தேவையோ அதை பார்க்கிறார்கள், பகிர்கிறார்கள்.
ஆனால் கீழே வைத்தால் கை அந்த அலைபேசியை நாடுகிறது.. அலைபேசியும் ஈர்க்கிறது மனிதனும் ஈர்க்கிறான்.
என்ன காரணம்??
கடும்பற்று அதன் மேல் இருப்பதே காரணம்.
காந்தத்திற்கு ஈர்க்கும் ஆற்றலும்உண்டு விலக்கும் ஆற்றலும் உண்டு.
தனக்குப் பிடித்த ஒன்றை ஈர்த்துக் கொள்வதை அளவுடன் முறையுடன் உறவு கொள்வதை, விலக்கி வைக்கப் பழகிக் கொள்வது சற்று சிரமமான காரியம் தான்.
ஆனால் மனதை சிலவற்றிற்கு *வேண்டாம்* என்று சிலவற்றிற்கு சொல்லப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறிது நேரம் அப்பொருளுடன் உறவாடுவதை விலக்கி, அதிலிருக்கும் கடும்பற்றை நீக்க வேண்டும்.
மனதிற்குள் அழுத்தமான சங்கல்பம் ஒன்று போட்டுக் கொள்ள வேண்டும். 'நான் நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவு ஆக்கவழியில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும், அலைபேசியின் நேரத்தை சில மணி நேரங்கள் மட்டுமே பயனுள்ள முறையில் சிந்திக்க அறிவைப் பயன்படுத்துவேன் என்றும், அழுத்தமாக தினமும் அந்த எண்ணத்திற்கு வலிமை கொடுக்கும் போது கடுப்பற்றுலிருந்து விடுபடலாம்.
இது எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
தவத்துடன் கூடிய தற்சோதனையுடன், சங்கல்பமும், இணைந்து பயணிக்கும் போது அளவுமுறையும், விழிப்புணர்வும் வந்துவிடும்.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment