Wednesday, 3 April 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(03/04/2019)*

நம் மகரிஷி சாந்தி தவத்தை அளித்திருக்கிறார்கள். ஏன் தெரியுமா?? குடும்பத்தில் உறவிலே நல்லிணக்கத்தைப் பேணவும், எந்த அளவில், யாரிடம் எவ்வாறு  அளவுமுறையோடு பழகுவது என்பதும் மனதிற்கு  அமைதி பெறவும் அதை தக்க வைக்கவும் தான்.

தவக்கனலை குறைப்பதற்கு மட்டுமல்ல. பொறுமையும், நிதானமும் மூலாதாரத்தில் கவனிக்கும் போது வரும். சமநிலை, சகஜ நிலை இங்கு தான் கிடைக்கும்.

நம் உடல், உயிர், மனம்,  இதற்கான மையம் கருமையம். மூலாதாரம், ஆன்மா, உள்ளம், அகம், என்று கூறுவார்கள்.

மூலத்திற்கு ஆதாரமாக இருப்பது மூலாதாரம். . இறைநிலையே மனிதனுக்கு ஆதாரமாக உள்ள உயிரை  தூய்மைபடுத்த ஒரு உதவி.. குருவின் சேர்க்கை உயிர்கலப்பு.

இறைநிலை என்பது மூலம். அதில் மனதை கவனிக்கும் போது மண்ணுக்குரிய ஆராய்ச்சி. இப்பிறப்பின் ரகசியம். பிறவியின் நோக்கம் புலப்படும்.

மனதை லேசாக வைப்பதற்கும் நடுநிலைமையில்..  எந்த சூழ்நிலையிலும், தன்னம்பிக்கை, தைரியத்தோடும், நிற்பதற்கும் துணைபுரிகிறது.

ஒரு மரத்திற்கு மூலம் அதன் விதை தான்.

அதே போல் மனிதனுக்கு மூலம் மூலாதாரம். இது ஆழ்மனம்.  இங்கே சங்கல்பத்திற்கு வலிமை கூட்டும் போது அது திணிவு பெறுகிறது.  செயலாகிறது.
உயிருக்கான இயக்க மையம் மூலாதாரம். அமைதி வேண்டுமானால் இங்கே மனம் குவித்து சரி செய்ய முடியும். எப்பொழுதெல்லாம் உடல், மனநலன் அசௌகரியமாக உள்ளதோ, அமைதி தவத்தில் சிறிது நேரம் இருந்தால்.. உணர்ச்சி வயத்திலிருந்து உணர்வுநிலைக்கு வர முடியும்.

அன்புடன் ஜே.கே

No comments: