*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
*தினம் ஒரு மாற்றம்*
*(02/04/2019)*
நல்ல மனிதர்கள் உலகில் அதிகரித்து வருகின்றனர். வீட்டில், வெளியில், அலுவலகத்தில், குறைகளை பேசி, வம்பு அளக்காமல், இனிய சொற்களை, அன்பாகப் பேசி சக மனிதரிடம் நல்லிணக்கம் பேண நட்புணர்வை உறவாக வளர்க்கிறார்கள். எதற்கும் வாக்குவாதம் செய்ய வாய்ப்பே அமையாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், அனுசரித்தும் செல்கின்றனர்.
பொறாமையை வளர்க்காமல் பொறுமையை வளர்க்கிறார்கள்.
மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் மனதை வளப்படுத்த யோகக் கலையை கற்று மனதை லேசாக வைக்கின்றனர்.
கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கிறது. கூட்டுக் குடும்பம் மீண்டும் பாதுகாப்புணர்வை அதிகரிக்கிறது. தனிமை குறைக்கப்படுகிறது.. உறவுகள் வலிமை பெறுகிறது. அலைபேசியில் பேசுவது குறைந்து நேரடியாக எதையும் அமர்ந்து கலந்து பேசி முடிவுகளை சரியாக எடுக்கின்றனர்.
இயற்கை உணவும், ஆரோக்கியமும் மக்களிடையே பெருகுகிறது. உலகத்தில் தன்னுடைய உயிரையும், பிறருடைய உயிரையும் மதிக்கும் தன்மை ஓங்குவதால் சண்டை சச்சரவு வன்முறைகள் குறைந்து அன்பும் கருணையும் ஓங்குகிறது.
இயற்கையே அனைத்தும்... மூலமும் முடிவும் ஒன்றே என்றுணர்ந்த போது அங்கே அமைதி நிலைக்கிறது. உலக அமைதி நிலவுகிறது. இயற்கை வளம் ஓங்குகிறது. தெய்வீகம் பரவுகிறது. சிந்தனைத்திறனில் ஏற்றம் நிகழ்கிறது.
எங்கும் பசுமையும், அன்பும், அறனும் மலர்கிறது. கல்வித் தரத்தில் ஏற்றம் மாற்றங்களாக சிந்தனைத்திறனை ஊக்குவிப்பதாக ஒழுக்கப்பழக்கக் கல்வியை.. விஞ்ஞானம், விவசாயத்தில், ரசாயனக் கலவை அல்லாத இயற்கையின் மணம்... அதன் வாசம் எங்கும் வீசுகிறது. நற்பண்புகள் அனைவரிடையே ஊடுருவுகிறது. ஊடாடிக்கொண்டே இருக்கிறது. உலகமெல்லாம் அதன் நறுமணம் பரவுகின்றது.. அமைதியும் மகிழ்ச்சியும் நிலவுகின்றது.
இவ்வாறு சிந்திக்கும் போது அதை கற்பனைக் காட்சியாக மனதில் வலம் வருகிறது. மனம் பேரானந்தம் அடைகிறது.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment