வாழ்க வளமுடன்
அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்
பாகம் : 22
மனித அமைப்பில் உள்ள மற்றுமொரு சிறப்பு மிக்க சாதனம் மனம்.
"இந்த மனம் எங்கே தோன்றுகிறது, எவ்வாறு இயங்குகிறது, மனம் இயங்கும் போது நமது உயிரிலும் உடலிலும் எத்தகைய விளைவுகள் நிகழ்கின்றன - என்ற விவரங்கள் குறித்து அருட்தந்தை அவர்கள் வழங்கியுள்ள விளக்கங்களைக் கீழே காணலாம்.
" மனம் இல்லாத மனிதனும் இல்லை. மனதை அறிந்து கொண்ட மனிதர்கள் சிலர் தான் " என்று அருட்தந்தை அவர்கள் கூறுவார்கள். மேலும், மனதின் சிறப்பைப் பற்றி,
" மனம் புலன் உணர்வினில் மயங்கிட மாயையாம் " என்ற வரியில் தொடங்கும் பாடலில் கீழ்க்காணுமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
"மனமது இயற்கையின் மாபெரும் நிதியலோ!
மனமதைத் தாழ்த்திட மயக்கத்தால் துன்பமே
மனமதை உயர்த்தினால் மட்டிலா இன்பமாம்
மனத்திலே உள எல்லாம் மற்றெங்கேத் தேடுவீர்?
- பாடல் எண் : 1176, ஞானக்களஞ்சியம்.
இத்தகைய மனம் எங்கே தோன்றுகிறது என்பதை அருட்தந்தை அவர்கள் கீழ்க்காணுமாறு விளக்கமளிக்கிறார்கள்.
உயிரின் உட்பொருளாய் சுத்தவெளி (தெய்வம்) இருக்கிறது என்றும் இயக்க நிலையில் தெய்வமே அறிவாக செயல்படுகிறது என்பதையும் ஏற்கனவே சிந்தித்தோம். இதற்குச் சான்றாக அருட்தந்தை அவர்கள் ஒரு பாடலை நினைவு கூருவோம்.
"அறிவாக என்னுள்ளே அமர்ந்து இயங்கிக்கொண்டே
அகண்ட பேரண்டத்துள் அடங்கியுள்ளவற்றை
பொறி ஐந்தின் புலனைந்தின் இயக்க அலை மூலம்
புரிந்து கொள்ளும் நுட்பத்தை எனக்களித்து விட்டாய்
பாடல் எண்: 5, பக்கம் : 17
அருட்பேராற்றலின் அன்புக்குரல்
தொடரும்....
No comments:
Post a Comment