*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
*தினம் ஒரு மாற்றம்*
*(05/04/2019)*
*எப்பொருளை எச்செயலை எக்குணத்தை எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால் அப்பொருளின் தன்மைதாய் நினைப்போர் ஆற்றல் அறிவினிலும் உடலினிலும் மாற்றம் காணும்..* ( ஞா.க. 10)
இது தான் இயல்பூக்க நியதி.. குருவின் மதிப்பை மட்டும் மகரிஷி இங்கே குறிப்பிடவில்லை.. இததைத் உள்ளார்ந்த பொருளை கவனிக்க வேண்டியுள்ளது.
யார் எதை, யாரை, எந்த விஷயத்தை, எந்த செயலை நினைத்துக் கொண்டே இருக்கிறார்களோ.. அந்தத் தன்மையினை தனது குணநலன்களாக, பண்புநலன்களாகப் பெறுவது திண்ணம்.
இதன் மூலம் சில கேள்விகள் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை..
எவ்வகையான நண்பர்களை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்??
எந்த விளையாட்டை அவர்கள் அதிகம் நாடுகிறார்கள்?? அதாவது சில Games அலைபேசியில் உள்ளதில் பல Shooting games (சுடுதல் ) உள்ளது.. ஒருவருக்கு உதவி செய்வது போல உணவு பரிமாறுவது போல சில Games . இப்படி ஆக்கத்திற்கு உதவும் விளையாட்டா, அழிவிற்கான விளையாட்டை நாடுகிறார்களா??
இப்படிப் பலப் பல விஷயங்கள் இன்று கணிணியில் உள்ளது. அதில் அவர்கள் நாடுவது எதை??
அல்லது நண்பர்களுடன் ஓடியாடி விளையாட ஆசைப்படுகிறார்களா??
பதின்பருவ வயதினர் அலைபேசியில்/ தொலைக்காட்சியில் எதை ரசித்துப் பார்க்கிறார்கள்?? அதை கவனிக்க லேண்டியுள்ளது. வயதிற்குரிய சில விஷயங்களை நாடுவது இயல்பான விஷயம். ஆனால் அதில் மூழ்காமல் இருப்பதற்கு மனவளக்கலை பயிற்சி உதவும்.
பெரியவர்கள் ஆண்கள்/ பெண்கள் இருபாலரும் FB, Instagram, Twitter, Whats App, போன்ற பல Apps. உள்ளது. நடிகர் வடிவேலு அவர்கள் கூறவது போல் 'வச்சிட்டான்யா ஆப்பு??' அது App அல்ல.. கூர்ந்து கவனித்து அதிக நேரம் அதில் செலவழிப்பதை விளைவறிந்த விழிப்புணர்வில் ஊடகங்களை நல்ல விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்துவது சிறப்பு..
இது தான் இன்றைய தொழில்நுட்பத்தை மனிதர்கள் பயன்படுத்தும் இயல்பூக்க நியதி..
எதிலும் எதையும் அடிமையாக்காமல் தனது உடல் மனம் தனது கட்டுப்பாட்டில் வைப்பது சிறப்பு.
எதிலும் கவனம் வேண்டும்.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment