Tuesday, 31 July 2018

A Change of day (31/07/2018)

“May the whole world enjoy happiness, good health, long life, enough wealth, prosperity, wisdom, and peace.”

BE BLESSED!!

* A change of day * (31/07/2018)
The Way of Maintaining the Family

1022 :

The dying and the cognizant of the dreadfulness of the longevity of the two
.
Description 1:
A drunkenness of both of which is known as intellectual knowledge is a rising one's drink.

Description 2:
The family and the family will rise to do the same with both endeavors and effort.

English Couplet 1022:
The manly act and knowledge full, when this
combination is in the long run, then lengthens out the race's line.

Couplet Explanation:
One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances.
What do we think about the idea that people who are thinking something? Why are you thinking
What is the benefit of that? Does anyone look for that?

We see how many things a day we are seeing, listening, consuming, breathing, the mobile phone, the touch screen, the number of times we touch it.

Does the time spent on it benefit from it?

What is it that we learned today?

Does it give health ??
Does It Make Mental Health?
Does the family have peace?

What is the profit for this?

One has achieved the benefit of advertising a business.

Was the viewer ever benefited? They are brainwashed and earn income. They put ads in a way to attract the audience.

People are aware of their self-thinking and awareness.

One and the other person must be happy with the action.

If you think that's what the mental satisfaction gives you to understand.

If you give priority to your duty, your life can be satisfied.

First of all, the family must have equal commitment to maintain and maintain relationships.

With JK

தினம் ஒரு மாற்றம் (31/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (31/07/2018)
The Way of Maintaining the Family

குறள் 1022:

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.

விளக்கம் 1:

முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.

விளக்கம் 2:

முயற்சி, நிறைந்த அறிவு என்னும் இரண்டுடன் இடைவிடாத செயல் செய்யக் குடும்பமும் நாடும் உயரும்.

English Couplet 1022:

The manly act and knowledge full, when these combine
In deed prolonged, then lengthens out the race's line.

Couplet Explanation:

One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances.

ஏதோ ஒன்று யோசித்துக் கொண்டே இருக்கும் மனிதர்கள் அந்த யோசனையில் சிந்தனையில் என்ன யோசிக்கிறோம்?  ஏன் யோசிக்கிறோம்?
அதனால் விளையும் பயன் என்ன? என்று ஆராய்ந்து யாராவது பார்ப்பதுண்டா??

ஒரு நாள் முழுக்க எவ்வளவு விஷயங்களை பார்க்கிறோம், கேட்கிறோம், நுகர்கிறோம், சுவாசிக்கிறோம், அலைபேசியை கணிணியை, தொலைகாட்சியை, எத்தனை முறை தொடுகிறோம் அதனுடன் உறவாடுகிறோம்.

அதில் ஒருவர் செலவழிக்கும் நேரம் தனக்குப் பயன் தருகிறதா?

அதை பார்ப்பதால் என்ன இன்று கற்றுக் கொண்டோம்?

உடல்நலனை தருமா??
மனநலனை ஈட்டித் தருகிறதா??
குடும்பத்தில் அமைதி நிலவுகிறதா?

யாருக்கு என்ன லாபம் இதனால்?

ஒருவர் வியாபார நோக்கில் விளம்பரம் போடுவதில் பலன் அவர் அடைகிறார்.

பார்ப்பவர் என்றாவது பயன் அடைந்தது உண்டா? ஒருவரை மூளைச்சலவை செய்து வருமானத்தை ஈட்டிக் கொள்கிறார்கள். அதற்கு பார்வையாளர்களை கவரும் வகையில் விளம்பரங்களை போடுகிறார்கள்.

மக்கள் சுயமாக சிந்தித்து செயல்பட விழிப்புணர்வு வந்து கொண்டே இருக்கிறது..

ஒருவர் செய்யும் செயலால் தானும் பிறரும் மனம் நிறைவு கொள்ள வேண்டும்.

அவ்வாறான மன நிறைவு எது கொடுக்கிறது என்று சிந்தித்தால் புரியும்.

அவரவர் கடமைக்கு முன்னுரிமை கொடுத்தால் வாழ்க்கையில் மனநிறைவு கொள்ள முடியும்.

குடும்பக்கடமை முதலில்,  உறவுகளை பேணிக் காப்பதிலும், அதற்கு வேண்டிய பொருளாதாரத்திற்கும் சமமான கடமையுணர்வு வேண்டும்.

அன்புடன் ஜெ.கே

Monday, 30 July 2018

தினம் ஒரு மாற்றம் (30/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (30/07/2018)

மக்களில் சிலர் பேச்சு வழக்கில் எனக்குக் கோபம் குறையவே மாட்டேங்குது.. என்றும், ஒரு சிலர் எவ்வளவு கோயில் கோயிலா நேர்த்திக் கடன் பண்றேன் அப்பவும் எனக்குக் கஷ்டமே தீரல .. என்றும் ஒரு சிலர்... ஒரு பக்கம்... வெளியே பலருக்கு  நன்மைகளையும் செய்து கொண்டு இன்னொரு பக்கம்  வீட்டில் குடும்ப உறவுகளிடம் கடிந்து கொண்டும், உறவுகளிடம் கோபித்துக் கொண்டும் அவர்களிடம் வீணான மனவருத்தத்தையும் வாங்கிக் கொள்வார்கள்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயம் என்னவென்றால்.. கோபம்,  கஷ்டம் என்ற சொற்களின் பயன்பாட்டை விட்டுவிட்டு பொறுமையாக இருக்கிறேன் என்று கூறுவதினால் பொறுமை ஒருவரிடம் தானாகவே வர ஆரம்பிக்கும்.

கஷ்டம் என்ன சொல்லின் பயன்பாட்டை விட்டுவிட்டு எனக்கு இறைவன் நன்மைகளையே செய்கிறான் என்றும்,  அதில்நான் மனநிறைவாக இருக்கிறேன் என்றும் நினைப்பதால் அந்த மனநிறைவும் தானாகவே வரும்.

எதிர்மறை சொற்களை பயன்படுத்துவதை அறவே விட்டுவிட்டால் நேர்மறை தானாகவே ஒருவரிடம் உள்ளதை உணர முடியும்.

உடன் இருக்கும் உறவுகளை பகைத்துக் கொண்டு வெளியில் எவ்வளவு நன்மை செய்தாலும் அது செயல் விளைவு கணக்குப்படி பாவம் மற்றும் புண்ணியக் கணக்கில் இரண்டிலும் கணக்கு ஒன்றாக நிற்குமே தவிர நன்மை செய்வதால்  புண்ணியம் மட்டும் ஏறும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்???

உதாரணத்திற்கு    ஒரு இடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது .. வேறொரு இடத்தில் நீர் ஊற்றினால் அந்த நெருப்பு  அணையுமா??? நெருப்பு எரியும் இடத்தில் நீர் ஊற்றினால் தானே அணையும்.. அது போல் தான் அனைத்தும்.

முதலில் தன்னிடத்தில் திருத்தம் வந்தால் மட்டுமே மனம் அமைதி பெற முடியும்.

*"தப்புக் கணக்கிட்டுத் தானொன்று எதிர்பார்த்தால் ஒப்புமோ இயற்கைவிதி??*
*ஒழுங்கு அமைப்பிற்கு ஒத்தபடி அப்போதைக்கப்போது அளிக்கும் சரி விளைவு, எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவர் இதையுணரார்."*  - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
(ஞா.க. 1429)

யோகக் கலையில் ஈடுபட்டுள்ளவர்கள்  செயல் விளைவை உணர்ந்து அறச்செயலில் ஈடுபட ஆரம்பித்து விட்டனர்.

இயற்கை சட்டம் உணர்ந்து உலகில் இனிமை காண்பதே அறிவுடைமை. மகிழ்ச்சியுடன் அனைவருடனும் அன்பிணக்கத்துடன் அறவழி வாழ்வதே ஒரே வழி. எளிய வழியும் அதுவே.

அன்புடன் ஜெ.கே

தினம் ஒரு மாற்றம் (28/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (28/07/2018)

நீர் நிறைந்த பாண்டத்துள் காற்றேறாது
நித்தியமாம் மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலகப் பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும்
உள் நுழையா இப்பேறு தவத்தாலன்றி
யார் பெறுவர் யார் தருவர் அறிவு ஓங்கி
அதுவே தான் மெய்ப்பொருளென்றறியும் பேற்றை
சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப் பற்றை
செதுக்கிக் கொண்டேயிருக்கும் விழிப்பு வேண்டும்.
- வேதாத்திரி மகரிஷி

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் உடல், மன பயிற்சிகள் எல்லாம் செய்த பின்னர் தன்னை சீர்செய்து கொண்டு இருக்கிறோமா என்றும், அந்த அமைதியை குடும்பத்தில் காண முடிகிறதா என்றும் உற்று நோக்க வேண்டும்.

தன்னிடத்தில் உடல், மன அமைதி பிறந்தால் மட்டுமே அதை குடும்பத்திலும் அளிக்க முடியும்.
அந்த அமைதியும், மகிழ்ச்சியும் குடும்பத்தில் பரவ விடும் போது அதுவே சிறிது சிறிதாக அக்கம் பக்கத்தினரிடம் ஒரு நல்லிணக்கம், அமைதி காண முடியும்.

அது எப்படி சாத்தியம் என்பவர்களுக்கு மனவளக்கலையை தன்னிடமும்,  வாழ்க்கையிலும், பயன்படுத்தி பார்க்கும் போது அது சாத்தியம் என்பது புரியும்.

எதைப் பார்த்தாலும் பயம் என்று இருப்பவர்களுக்கு தைரியம் வரவேண்டுமா??

*தவம் செய்வதால் அந்த பயம் நீங்கும்.*

எல்லாவற்றையுமே இறைவனின் வடிவமாகக் காணும் போது அங்கு அன்பும், தைரியமும், உண்மையும், ஓங்கும். பயம் நீங்கும். தைரியம் ஓங்கும். தன்னம்பிக்கை வளரும்.

உளவியல் ரீதியான உண்மை இது.

*மனதை புலனிலேயே பழக்கும் போது அறிவு விழிப்புநிலையில் இருக்காது.*

*அறிவு விழிப்புநிலையில் இருக்கும் போது புலன் அடங்கி விடும்.*

அறிவு மெய்ப்பொருளாக மாறும் போது அதுவே தானாக உணரும் காட்சியை உணர முடியும்.

மனநிம்மதி கைகூடும்.

அன்புடன் ஜெ.கே

தினம் ஒரு மாற்றம் (27/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (27/07/2018)

*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்*
உலகில் அனைத்தும், அனைவரும் அணுக்களின் கூட்டு, அதிலிருந்து அலைகள் வந்துக் கொண்டே இருக்கின்றன, அது அவரவர் எண்ணம் சொல் செயலுக்கேற்ற ரசாயன மாற்றங்களை உடலில் ஏற்படுத்தி தக்க விளைவுகளை கொடுக்கிறது என்கிறார்கள்.

*வாழ்க வளமுடன்* என்ற வாழ்த்து ஒன்றினால் அனைத்தையுமே, இவ்வையகத்தையும், பிரபஞ்சத்திடமும் கூட, ஒரு நட்புறவை ஏற்படுத்த முடியும் என்கிறார்கள்.

*எதிரியைக் கூட மனது ஒன்றி வாழ்த்தினால் அவர்களிடம் ஒரு நட்புறவை நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அல்லது அவர்கள் தொடர்ந்து துன்பம் கொடுப்பவராக இருந்தால் கூட மனமாற்றம் உண்டாகும் என்கிறார்கள் அருட்தந்தை அவர்கள் ... எவ்வளவு அன்பும் கருணையும் கொண்டவர்கள் .... இந்த சிந்தனையை வாழ்க்கையில் மனமுவந்து செயல்படுத்திப் பாருங்கள்.*

உண்மையில் எனக்கு  எதிரி என்பவர் கிடையாது.. மற்றொன்று சில புரிதலின்மை காரணமாக இருந்தவர்கள் கூட
*வாழ்க வளமுடன்* கூறும் போது எனக்கு முதலில் மாற்றம் நிகழ்ந்தது. அன்பு பெருகியது. விட்டுக் கொடுத்தல் அதிகமாகியது. அதன் பின் அவர்களிடமும் மனமாற்றத்தை உணர முடிந்தது.

*குருவின் கருணையை என்னவென்று கூறுவது..*

மிக எளிமையான விஷயம் தான். அவரவர் மனம் மாற அவரவர் மனதை பக்குவப்படுத்தத் தயாராக இருக்க வேண்டும்.
வாழ்க வளமுடன் என்று வாழ்த்த வேண்டும். தன்னையும், பிறரையும்.... அவ்வளவு தான்..

அன்புடன் ஜெ.கே

அருட்தந்தை கேள்வி பதில்

❓ கேள்வி :-
~~~~~~~
சுவாமிஜி அவர்களே,

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வினைப் பதிவுகள்

திருமணம் செய்து கொண்ட பின்

உடல் இணைப்பால் ஒருவர் பதிவு மற்றவருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா..???

❗பதில் :-
~~~~~~

நிச்சயமாக பதிவுகளில் பரிமாற்றம் ஏற்படும்

அவ்வாறு ஏற்படுவதே இருவரும் இணைந்து செயல்பட

அல்லது எதிர்த்து சண்டையிட காரணமாகிறது

ஏற்கனவே ஒருவருக்கொருவர் உள்ள பதிவை மாற்றுவதற்குத்தான் இருவருமே இணைகிறார்கள்

இதற்கான பதிவு ஏற்கனவே செயலுக்கு வந்த பிறகு தான்

இயற்கை இருவரையும் இணைத்து வைக்கிறது

ஆனால்

மேல் எழுந்த வாரியான பதிவுகள் ஒவ்வொருவருக்கும் எத்தனையோ இருக்கும்

அவையெல்லாம் ஒருவரை ஒருவர் பாதிப்பதில்லை

உதாரணமாக,

ஒருவருக்கு ஒரு செயல் பிடிக்கும் என்றால்

மற்றவருக்கும் அது பிடிக்கவேண்டும் என்ற அவசியமில்லை ❗

அருட்தந்தை கேள்வி பதில்

அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்

 கேள்வி: ஐயா, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்கு பொருந்துமா?

 பதில்: அந்தப் பழமொழிக்குக் காலையில் தவறு செய்தால் மாலையில் துன்பம் வரும் என்பது நேரிடையான பொருள். செயலுக்கு தானாகவே விளைவு வரும். அது உடனடியாகவும் இருக்கலாம், தாமதித்துப் பத்து வருடங்கள் கழித்தும் வரலாம்.

 செயலுக்குத் தக்க விளைவு இருக்கிறது. செயலுக்கும் விளைவிற்கும் கால தூரம் என்று ஓர் கணக்கும் இருக்கிறது. அது அந்தந்தச் செயலைன் தன்மையை ஒட்டியும் ஏற்படும்.

 மனிதனின் செயல் எந்த இடத்தில் இயற்கையினுடைய இயல்பான சட்டத்திற்கு முரண்படுகிறதோ, அந்த முரண்பாடே அங்கே துன்பமாகிறது. எந்தச் சிக்கலை எடுத்தாலும் சரி, எந்தத் துன்பத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, அது இயற்கையோடு கொண்ட முரண்பாட்டின் அடையாளம் தான்.

 சாப்பிட்ட சாப்பாடு உடலில் ஜீரணம் ஆவதற்கு ஓர் ஒழுங்கமைப்பு இருக்கிறது. உணவில் அளவுமுறை இருக்கிறது. செரிமானம் ஆக காலம் வேண்டும். அதை மதிக்காமல் அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? அஜீரணம் வருகிறது: பேதி வருகிறது: அதனால் துன்பம் வருகிறது. இதையெல்லாம் உணரும் போது பழமொழியின் கருத்து சரிதான்.

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

Be happy with what u have (30/07/2018)

சாபங்களைக் கூட வரமாக மாற்றும் வரம் பெற்றால் அனைத்தும் நலமே! அறிவைக் கொண்டு சிந்திக்கும் போது இந்த ஆற்றல் பிறக்கும்.

ஜெ.கே

Spreading happiness spreads the happiness all over the world and across the world and the entire universe.. So be the one to spread happiness. Jk
Be blessed 🙏

I want to make everyone happy... with my positive attitude.. and do not want to make others unhappy.. Jk

தன்னைச் சுற்றி ஒரு ஆரோக்கிய மகிழ்ச்சியான வட்டம் போட்டுக் கொள்ளுங்கள்.. எதை நினைக்கும் போதும் அந்த நினைப்பு தனக்கும் மற்றவருக்கும், சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மை தருமா என்று யோசியுங்கள். இல்லையேல் அந்த நினைப்பையே கைவிட்டு விடுங்கள். ஜெ.கே

Sunday, 29 July 2018

தினம் ஒரு மாற்றம் (29/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (29/07/2018)

"ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே 
பேரா இயற்கை தரும்"

மு.வரதராசனார் உரை:

ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.

Translation: 

Drive from thy soul desire insatiate; 
Straight'way is gained the moveless blissful state.

Explanation: 

The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.

அவசியமானவற்றில் மட்டுமே கவனத்தைத் தானே திசைத் திருப்பிக் கொள்வது தன்னிலை உணர்வாகும். இதற்கு  தியானம் உதவும்.

(உ-ம்) அலைபேசியில் நேரத்தை சிக்கனமாகவும் அளவுடனும் கையாள்வது,  யோகா, நேர மேலாண்மை விழிப்புணர்வு, சுய பாதுகாப்புடன் வாழ்வது, எப்பொழுதும் மன தைரியத்துடன், தன்னம்பிக்கையுடன் இருப்பது உயர்வை ஈட்டித் தரும்.

நிறைவேறக் கூடிய ஆசைகள்
தகுதியுடையவர்களிடம் செயலாகும்.

சில மனதுக்குப் பிடித்த விஷயம்... ஆனால் உடன் இருப்பவர்களுக்கு அது ஏற்றுக் கொள்ள முடியாத  விஷயமாக இருப்பின் அந்த ஆசையை வளர்த்துக் கொள்வதை விட கைவிடுவது மேல்.

மனம் தேவையில்லாததை சிந்திப்பதில் இருந்து விலக்கிக்  கொள்ளவும், மனத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும், நல்ல சிந்தனைகளைத் தானே தூண்டிவிடவும், மனத்தை பழக்க வேண்டும்.

*எதை மனம் தூண்டுகிறதோ, அதில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.*

தூண்டும் விஷயங்களுக்கு எல்லாம் இடம் கொடுத்தால் புலன் மயக்கத்தில் தான் மனம் இயங்கும்.

*அறிவை விழிப்புணர்வுடன் நேர்மறையாக சிந்திக்கவும், நேரத்தை மதிக்கவும், கற்றால் அதுவும் நம்மை மதிக்கும். பாதுகாப்பு பிறரிடம் அல்ல தன்னிடமே உள்ளது.*

அன்புடன் ஜெ.கே

அருட்தந்தை கேள்வி பதில்

அன்பர்கள் கேள்விகளும் அருட்தந்தையின் பதில்களும்

 கேள்வி

சினம் அடங்கிய நிலையிலும் மனம் அடங்கவில்லையே என்பதுபோல, மனம் அடங்கிய நிலையிலும் சினம் அடங்காத நிலைக்குச் சான்றுகள் பல உள்ளன.  மனம் அடங்கிய துர்வாசருக்குச் சினம் அடங்காமல் போனது ஏன்?

பதில்

மனிதனுக்குத் தன்முனைப்பு என்று ஒன்று இருக்கிறது.  தன்முனைப்பிலே 'தான்'  'தனது' என்ற இரண்டு எழுச்சிகள் உண்டு.  'தான்' என்பது அதிகாரப்பற்று (aggressiveness).  'தனது' என்பது பொருள் பற்று (possessiveness).  ஆகவே அந்த அதிகாரப் பற்று என்பது "தனக்கு மேலாக ஒருவர் திகழக் கூடாது, வளரக்கூடாது,  உயரக்கூடாது" என்ற எண்ணத்தை உடையது.  ஆகையினாலே ஒருவர் உயர்ந்துவிட்டால், ஒருவர் செழித்துவிட்டால் அதைப் பார்த்துக் கொண்டு அவர்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது.  அது அவருடைய நோய். 

உங்களுக்கு ஏன் அந்தக் கவலை ?  அதை விட்டுவிடுங்கள்.  அந்த நோயை அவரே குணப்படுத்திக்கொள்ள வேண்டியதே தவிர அது நம்மை ஒன்றும் பாதிக்காது. 

அத்தகைய மனிதர் ஏதேனும் ஒரு பழிச்சொல் சொன்னார், தீங்கு செய்தார் என்றால்* அவரை "மனதாரக் காலை, மாலை வாழ்த்துங்கள்".  எல்லாம் சரியாகிவிடும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

Saturday, 14 July 2018

தினம் ஒரு மாற்றம் (12/07/3018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (12/07/2018)

ஒன்று பெற வேண்டுமானால் ஒன்றை கொடுத்தால் தான் முடியும்.

இறையுணர்வு பெற மனக் கழிவுகள் போக வேண்டும்.

Give and take policy இவ்வுலகில் எல்லாமே இதன் அடிப்படையில் தான்  இயங்குகிறது.

தொலைக்காட்சி, அலைபேசி, கணிணி, பார்க்கிறோம் கேட்கிறோம்.
ஒருவரது சக்தியை கொடுத்துத் தான்  பார்க்கவும், கேட்கவும், நுகரவும், பேசவும், சுவைக்கவும் புலனின்பம் பெறவும் முடியும்.

அது எப்படி என்று கேட்கிறீர்களா??

ஒரு நாள் முழுவதும் எத்தனையோ செயல்களை பார்க்கிறோம்,  கேட்கிறோம், சுவைக்கிறோம், நமது ஆற்றல் விரயமாகாமல் அதைப் பெற முடியுமா??

உடல், மனம் உழைப்பு வெறும் கை, கால்களுக்கும்  மட்டும் தான் என்றில்லை. கண்கள் மூலமாக டி.வியை பார்க்கும் போதும், காதுகள் மூலமாக ஒன்றை கேட்கும் போதும், நமது சீவகாந்தம் செலவு செய்து தான் பெறுகிறோம்.

ஆற்றல்கள் செலவாகும் போது அவரவர் (Energy field )அதாவது அவர்கள் சக்தி விரயமாகிறது. ஓய்வு தேவைப்படுகிறது.

மொபைல் போன் பாட்டரி சார்ஜ் போடுவது போல், மனித உடலுக்கு தூக்கத்தில்  மட்டுமே ஆற்றலை மீண்டும் பெற முடியும். ஏதேனும் உடல் ரீதியான சிக்கல்களை உடலே சரி செய்தும் விடும்.

ஆகவே எதுவும் செயலுக்கு உண்டான விளைவு தானே தவிர வேறு ஏதும் இல்லை என்பதை உணர்ந்து கொள்வது அவசியமாகிறது.

ஆற்றலை சேமிக்க என்ன செய்யலாம்?? கண்களின் மூலம் விரயமாவதை தியானம் மூலம் அகத்தை நோக்க வேண்டும்.
வாய் மூலம் அவசியமில்லாததை  பேசுவதை குறைத்தும், உணவில் ஒழுக்கம் கடைபிடித்தும், மௌனத்தில் இருப்பதும் சேமிப்பாகும்.

காதுகள் மூலம் வெளிப்புற நிகழ்ச்சிகளில் கேட்டு விரயமாவதை தவிர்த்து அருட்பேராற்றலின் அன்புக் குரலைக் கேட்பதின் மூலம்  இறைவனின் அன்புக் கட்டளையை கேட்க முடியும்.

மூக்கு மூலம் உணவு வகைகள், வாசனை திரவியங்கள், நறுமணம் மூலம் செலவாகும் ஆற்றலை சுவாசத்தை கவனிப்பதின் மூலம் மூளைக்கு பிராணசக்தியை அளித்து ஆற்றலை பெருக்கிக் கொள்ள முடியும்.

தோல் மூலம்  ஆற்றலை, உணர்வது, அனுபவிப்பது, ஸ்பரிசிப்பதன் மூலம் ஆற்றல் செலவாவதை தவிர்க்க புலன் கட்டுப்பாடும் ஒழுக்கமும் பெற பஞ்சேந்திரிய தவம் உதவும்.

இவ்வாறு ஐம்புலன்கள் மூலம் ஆற்றல் விரயமாவதை சேமிக்க தியானம் பயில்வோம். புலன் மயக்கம், புலன் பற்று, இதன் மூலம் சரி செய்யவும் அனைத்திலும் அளவுடன் அனுபவிக்கவும், தேவையில்லாதவற்றில் கவனம் செலுத்தி நேரம் விரயமாக்குவதில் இருந்து தவிர்க்கப்பட்டு, ஒழுக்கம் மேம்பட்டு, கட்டுப்பாடு கடைபிடிக்க முடியும்.

அன்புடன் ஜெ.கே

தினம் ஒரு மாற்றம் (11/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்*  (11/07/2018)

"ஒன்றி ஒன்றி நின்று அறிவைப் பழக்க உறுதி, நுட்பம், சக்தி இவை அதிகமாகும்."

-அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

ஒரு பொருளின் மீதோ, உணவின் மீதோ, ஒரு நபரின் மீதோ,  ஒரு குழந்தையின் மீதோ ஒருவருக்கு பற்றுதல்  அதிகமாகும் போது அதுவே எதிர்பார்ப்புடன பந்தம் பாசம் பற்றுதல் அதிகம் ஆகிறது.

அதுவே அப்பொருளை, அச்செயலை நினைக்கவும், அனுபவிக்கவும்,  செய்யத் தூண்டுகிறது.

(உ-ம்) அலைபேசியை எடுத்துக் கொள்வோம்.

சிறிது நேரம் கீழே வைக்க மனம் வருகிறதா??

இணையதளம் வந்தாலும் வந்தது அதில் நிறைய நல்ல செய்திகளும் மற்றயவையும் வருகிறது..

யார் யாருக்கு எது தேவையோ அதை பார்க்கிறார்கள், பகிர்கிறார்கள்.

ஆனால் கீழே வைத்தால் கை அந்த அலைபேசியை நாடுகிறது.. அலைபேசியும் ஈர்க்கிறது மனிதனும் ஈர்க்கிறான்.

என்ன காரணம்??

கடும்பற்று அதன் மேல் இருப்பதே காரணம்.

காந்தத்திற்கு ஈர்க்கும் ஆற்றலும்உண்டு விலக்கும் ஆற்றலும் உண்டு.

தனக்குப்  பிடித்த ஒன்றை ஈர்த்துக் கொள்வதை அளவுடன் முறையுடன் உறவு கொள்வதை, விலக்கி வைக்கப் பழகிக் கொள்வது சற்று சிரமமான காரியம் தான்.

ஆனால் மனதை சிலவற்றிற்கு *வேண்டாம்* என்று சிலவற்றிற்கு சொல்லப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிறிது நேரம் அப்பொருளுடன் உறவாடுவதை விலக்கி, அதிலிருக்கும்  கடும்பற்றை நீக்க வேண்டும்.

மனதிற்குள் அழுத்தமான சங்கல்பம் ஒன்று போட்டுக் கொள்ள வேண்டும். 'நான் நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  அறிவு  ஆக்கவழியில் மட்டுமே பயணிக்க  வேண்டும் என்றும், அலைபேசியின் நேரத்தை சில மணி நேரங்கள் மட்டுமே பயனுள்ள முறையில் சிந்திக்க அறிவைப் பயன்படுத்துவேன் என்றும், அழுத்தமாக  தினமும் அந்த எண்ணத்திற்கு வலிமை கொடுக்கும் போது கடுப்பற்றுலிருந்து விடுபடலாம்.

இது எல்லாவற்றிற்கும் பொருந்தும்.

தவத்துடன் கூடிய தற்சோதனையுடன், சங்கல்பமும், இணைந்து பயணிக்கும் போது அளவுமுறையும், விழிப்புணர்வும் வந்துவிடும்.

அன்புடன் ஜெ.கே

தினம் ஒரு மாற்றம் (10/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (10/07/2018)

மகிழ்ச்சியை விரும்பும் மனிதர்கள் மகிழ்ச்சியை வரவேற்கத் தயாராகிறார்கள். அதை ஈர்க்கிறார்கள் தங்கள் இன்சொற்களின் வாயிலாக, அன்பின் மூலமாக, விட்டுக்கொடுத்தும், சகித்துக் கொண்டும் தன் பக்கம் இருக்கும் அமைதியையும் நிம்மதியையும், அதிகப்படுத்த ஆயத்தமாகிறார்கள்.

மகிழ்ச்சியை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களால்  எந்த ஒரு சூழ்நிலையையும் தன் பக்கம் விழிப்புணர்வுடன்  சாதகமாக்கிக் கொள்ள முடியும்.

தனது பிறவிப்பயன் தீர எது வேண்டும்?  என்ற தெளிவு உள்ளவர்களால், அதை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளும் துணிவை, அந்த இறையாற்றலே அளிக்கும்.

ஒரே ஒரு விஷயம் தான்... அந்த இறைவனுக்கு அனைவரும் உண்மையாக இருக்க வேண்டும்.

மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யக் கூடாது. அனைத்தையும் மதித்து வாழும் பண்பு போதும்.

உணவை அதிகப்படியாக உண்டால் அஜிரணமாகி உடலில் இருந்து வெளியேறுவது போலவே தான்.. அப்பொழுது ஆசையாக ஆனந்தமாக உண்டோமே என்றால் அளவுமுறை இங்கு மீறியதால் துன்பம் நேர்கிறது.

பணத்தாசையினால்.. உண்மையாக இருந்த ஒருவன் அளவுக்கு மீறி பாலில் நீர் கலந்து விற்றதால், சேர்த்த பணம், அளவுக்கு அதிகம்  ஆசைப்பட்ட பணம், ஆற்று நீரில் சென்றுவிட்ட கதையை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

இறைநீதியை உணர்ந்து மகிழ்ச்சியை ஈர்க்க கொடுத்து மகிழ்வோம்.

கொடுக்கக் கொடுக்கவே சுரக்கும்.

அதுவே அட்சயபாத்திரத்தின் பண்பு ..

எதை பாத்திரத்தில் இட்டால் எது சுரக்கும்? உண்மை, ஈகை, அன்பு, ஒற்றுமை, உறவுகளுடன் நல்லிணக்கம்,  பெருந்தன்மை, தன்னடக்கம், பணிவு, கனிவு, இன்பம், நிதானம்,...... போன்றவை..

மகிழ்ச்சியும் மனநிம்மதியும் வேறு எங்கு இருக்கிறது??

அனைத்தும்  அவரவர் இடத்திலே தான் இருக்கிறது.

எதை தருகிறோமோ அதுவே திரும்பி வரும்.

அன்புடன் ஜெ.கே

Tuesday, 10 July 2018

வேதாத்திரி மகரிஷி அவர்கள் சிந்தனை உரை

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் பிரம்மஞான வகுப்பில் அருளிய சிறப்புரை

Monday, 9 July 2018

தினம் ஒரு மாற்றம் (09/07/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (09/07/2018)

கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
-திருக்குறள்.

எதைக் கற்றாலும் அது 'தான்' கற்றுக் கொண்டதை, சரியாகப் புரிந்து கொண்டு, அதை ஒவ்வொருவரது  
வாழ்க்கையிலும்
அதன் நெறியை பயன்படுத்தியும், பின்பற்றியும், வாழ்ந்து அதில் மனநிறைவு கண்டால், அதே பலனை பிறருக்கும் நாம் எடுத்துரைக்கும் போது, அவர்களும் அதை பின்பற்றுவார்கள்.

ஆசிரியர்கள் தான் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில்லை.
வீட்டுப் பெரியோர்கள், பெற்றோர்கள், அறிவில் முதிர்ச்சியுடையவர்கள் அனைவரும் அனுபவசாலிகள். 

யார் கூறுவது தனக்கு நன்மை பயக்குமாயின் அந்த  அனுபவமும் அறிவும்  ஒரு பாடம் தான்.

தொழில்நுட்பத்தை ஆராய்ந்து கண்டறிந்ததே மனிதனின் அறிவு தான்.

கல்வியை நம்பும் அளவு பெற்றோர்களையும், பெரியவர்களையும், அவர்களது வாழ்க்கை முறையையும், அனுபவத்தையும் ஆராய்ந்தும், நம்பிக்கையோடும் பார்த்தால் அவர்கள் *இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையில் நோயின்றி, மனதில் களங்கமின்றி வாழ்ந்த முறை தெரிய வரும்.*

*உடல்உழைப்பும், உண்மையும், எதிர்பார்ப்பில்லாத அன்பும், விட்டுக்கொடுத்தலும், ஒற்றுமையும், அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டவர்கள் நற்பண்புகளோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்கிறார்கள்.*

*தொழில்நுட்பம் அறிவை வளர்க்கப் பயன்படுத்த வேண்டும்.*

*அறிவின் தரத்தை உயர்த்தப் பயன்பட வேண்டும்.*

வியாபார நோக்கத்திற்காக, தேவையில்லாததை, ஊடகங்களின் வாயிலாக, மனிதனின் தரத்தை பண்பை, மதிப்பை தரம் தாழ்த்தி  பயன்படுத்துவது அறிவுடைமை அல்ல.

தொழில்நுட்ப அறிவு என்ற பெயரில், வியாபாரத்தில் மனிதனின் தன்மானத்தையும், தரத்தையும் விலைபோக விட்டால் மிஞ்சுவது தான் என்ன??

அன்று ஒவ்வொன்றையும் தேடிப் போய் கற்றார்கள்,

இன்று உலகமே கையில், அலைபேசியில் உள்ளது.

எதை நம் மனதிற்குள் அனுமதிக்க வேண்டும், வேண்டாம் என்பது மனிதனின் அறிவிற்கு எட்டவில்லை என்றால் *மனவளக்கலை*  *யோகம் பயில்வது தான் சிறந்தது.*

சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது.

*ஒருவரது தனிப்பட்ட சுதந்திரத்தை, அடிமையாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாகும்.*

அன்புடன் ஜெ.கே