வாழ்க வளமுடன்
அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்
பாகம் : 20
நமது உடலில் இயங்கும் உயிராற்றல் (life force) பல கோடி உயிர்த் துகள்களின் கூட்டமைப்பு என்பதை ஏற்கனவே சிந்தித்தோம்.
உயிர்த்துகள்கள் இறைவெளியின் மிகச்சிறிய பின்னம் என்பதை உணர்ந்துள்ளோம். தங்கத்தை சிறு துகளாக ஆக்கினாலும், அந்த சிறு துகளும் தங்கம்தான். எனவே உயிர்த்துகளும் இறைவெளிதான்.
உயிர்த்துகள் தன்னைச் சுற்றி இறைவெளி அழுத்துவதால் வேகமாக சுழல்கிறது. எனவே, இறைத்துகளின் வெளிப்பகுதி (periferal portion) வேகமாக செயல்படுகிறது. இந்த உயிர்த்துகளின் மையத்தில் இறைவெளி உள்ளது. இது நிலைப்பகுதி (state).
இறைவெளியின் நான்கு உள்ளமைந்த தன்மைகள் (Inherent characters).
வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம் ஆகியவை இறைத்துகளின் மையப்பகுதியில் உள்ள சுத்தவெளிக்கும் இந்த நான்கு தன்மைகளும் உண்டு. இருப்பினும்,
"இறைவனைக் கண்டுகொண்டேன்
அறிவாய் இறைவனைக் காணுகின்றேன்"
என்று தொடங்கும் பாடலில் அருட்தந்தை அவர்கள் குறிப்பிட்டுள்ளவாறு, 'அறிவு' தான் இந்த நான்கு தன்மைகளுக்குள், மற்றவற்றை விட முக்கியத்துவம் உடைவதாக (predominant) சில நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே இறைவெளியின் (absolute space - God) ஒரு தன்மையாகிய பேரறிவு, பரமாணுவிலும், இறைத்துகளிலும் சிற்றறிவாக செயல்படுகிறது.
தொடரும்....
No comments:
Post a Comment