வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (31/08/2018)
இன்று பல குடும்பத்தில், வீட்டில், பெற்றோர்களில் யாராவது ஒருவர் மகளிடமோ/ மகனிடமோ நீ சொல் பேச்சேயே கேக்காதே! படிக்காதே! எப்பப்பாரு மொபைல் கையில வச்சிக்கோ! என்று சரமாரியாக கண்டிக்கிறோம் என்ற பெயரில் அந்த எண்ணத்திற்கும் சொற்களுக்கும் வலிமை கூட்டி அவர்களை அப்படியே ஆக்கி விடுகிறார்கள்.
அதற்கு பதில் மனதிற்குள் வாழ்க வளமுடன் என்றும் அருட்காப்பு போட்டுக் கொண்டும் தனது குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும், சொல்பேச்சு கேட்டு நடக்க வேண்டும் என்றும் அச்சொற்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அல்லது அவர்கள் எவ்வாறு சொன்னால் கேட்பார்களோ அவ்வாறு நேர்மறையாகக் கூற வேண்டும்.
எது வேண்டுமோ அதற்கு நேர்மறையாக எண்ணி அதற்கு அழுத்தம் கொடுப்பது பலன் கொடுக்கும்.
மாமியார், மருமகள் சில வீடுகளில் எதிர்ப்பு அலைகளை வீசிக் கொண்டே இருப்பார்கள். அங்கே வீடு அமைதியாகவே இருக்காது.
கணவன் மனைவிக்கும் இடையில், மனைவிக்கும் தனது அம்மாவிற்கும் இடையில் இதனால் சில சிக்கல்கள் நேரும்.
அந்த நேரங்களில் எனக்கு அவங்களப் பாத்தாலே பிடிக்கலை, எனக்கு இந்த உறவே வேண்டாம், என்று அந்த எண்ணத்திற்கு வலிமை கொடுப்பார்கள்.
சில விஷயம் புரியாததே காரணம். நாம் ஒரு உறவையே வேண்டாம் என்றால் அது தனக்கும் பிரதிபலிக்கும் என்பது புரிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு பதிலாக எனக்கு மாமியார் அவர்கள் வேண்டும், இந்த உறவு வாழ்நாள் முழுதும் வேண்டும். எனது கடமையை நான் செய்ய வேண்டும் அவர்கள் எனது தாய் போன்றவர். அவரை நான் மகளாக இருந்து பார்த்துக் கொள்வேன் என்று சங்கல்பம் கூறி அவர்களுக்கு சேவை புரிவதே தர்மம்.
வருத்த அலை யாரிடமும் வேண்டாம். வாழ்த்து அலையை பெறுவோம்.
வீட்டில் உள்ளப் பெரியவர்கள் படிக்காதவர்களாக இருக்கலாம் , அவர்களிடம் இருக்கும் பண்பு இன்று உலகில் மக்களில் பல பேருக்கு வரவேண்டும்.
பண்பில்லாதவர்களை வாழ்த்துவோம். வாழ்த்து ஒரு வரம். அதை சரியாகப் பயன்படுத்தினால் துல்லியமாக பலன் கிட்டும்.
பெரியவர்கள் தான் வாழ்க்கையின் அகராதி, இலக்கணம் எல்லாமே....
அவர்களிடம் வாழ்க்கையின் பொருளை கற்க வேண்டும். அவர்களின் அனுபவங்களே நாம் கற்க வேண்டிய பாடம்.
சிறியவர்களுக்குப் புரியவில்லை என்றால் பெரியவர்கள் அன்பாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம்.
புரிதல் இன்று குடும்பத்தில் வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால், அப்படியே சிலவற்றை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமாவது வேண்டும்.
சுயபுத்தி /சொல்புத்தி இருந்தால் மட்டுமே முன்னேற முடியும்.
சிலவற்றை பட்டுத்தான் தெரிந்து கொள்வேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு வாழ்த்து கூறுவது நலம் உண்டாகும்.
அன்புடன் ஜெ.கே