Friday, 31 August 2018

தினம் ஒரு மாற்றம் (29/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்*  (29/08/2018)

*வேதாத்திரியம்* என்பதே வாழ்க்கையில் அத்தனையையும்  எளிமையாகக் கடைபிடிக்கும் விஷயங்களையே அருட்தந்தை அவர்கள் அத்தனைப் பயிற்சிகளையும் எளிமையான குண்டலினியாகக் கொடுத்திருக்கிறார்கள்.

மனவளக்கலை மன்றங்களிலும் அதையே பின்பற்றி வருகின்றனர்.

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுப்பதற்காகவே அருளும் பொருளும்.

தன்னிடம் இருக்கும் ஆற்றலை பிறர் நலனுக்காக பயன்படுத்தி மேன்மை காண்பவரே உத்தமமான எளிமையான சீடன்.

மனவளக்கலையில் தரம் இருக்கிறது. அதை நோக்கி ஈர்க்கப்படுவார்கள் மக்கள். புண்ணியப்பதிவு யாரிடம் உள்ளதோ அவருக்கே யோகம் பயிலும் வாய்ப்பு கிட்டும். ஏனென்றால் அதில் யார் வருகிறார்களோ அவர்களுடைய நலம் தான் அங்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர்களின் வாழ்க்கை நல்வழிப்படுத்தப்படுகிறது.

விளம்பரமோ, ஆடம்பரமோ, திருவிழாக் கோலமோ,  இலவசங்களோ, பகட்டோ, புகழோ மகரிஷி அவர்களின் மனவளக்கலைக்கு அவசியமில்லாதது.

கடைகளில், ஊடகங்களில், சானல்களில் தான் இலவசங்களை காட்டி மக்களை ஈர்ப்பார்கள்.

இயற்கையாக இருக்கும் ஒன்று, இயல்பாக இருக்கும் ஒன்றை யாரும் விளம்பரப்படுத்தத் தேவையே இல்லை. அதில் பலனடைந்த மக்களே பேசுவர். எங்கு தரம் உள்ளதோ அங்கு தானாகவே அனைவரும் வருவார்கள்.

அன்பு அனைத்தையும் ஈர்க்கவல்லது.

போட்டி, பொறாமையை வளர்க்கும் எந்த ஒரு விஷயமும் மக்களுக்கு அவசியமில்லாதது.

உலக அமைதிக்கான வழியே மனவளக்கலை.

அன்புடன் ஜே.கே

No comments: