வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்*
( 23/08/2018)
"உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும்.
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே"
"காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே"
-பாரதியின் ஞானப்பாடல்..
காந்தம் என்பது பொதுவாக நாம் குறிப்பிடுவது Magnet.
ஆனால் பிரபஞ்சம் முழுவதும் நம்மைச் சுற்றிலும், அனைத்திலும், நம்முள்ளும் புறமும் காந்தம் இருக்கிறது. அதிலிருந்து அலைகள் வந்து கொண்டே இருக்கிறது.
விண்ணில், தூய வெளியில் இருப்பதை வான்காந்தம் என்று கூறுவர்.
இந்த வான்காந்தத்தை அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரத்தில் அதிக அளவு உள்வாங்க முடியும். அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் சுறுசுறுப்பாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். இதையே cosmic energy என்று கூறுவர்.
பக்தி என்பது நம்பிக்கை ... இங்கே சென்றால் அது நிறைவேறும் என்பது. மனதை தான் வழிபடுகிறார்கள். மனதில் எண்ணும் எண்ணத்திற்கு வலிமை கொடுக்கிறார்கள். மனம் என்பது சீவகாந்த அலை.
திருப்பதிக்கு போனால் திருப்பம் வரும் என்பதும் இதன் அடிப்படையில் தான்..மேலும் சித்தர்களின் அருளாற்றல் கூடுதல் பலனைத் தரும்.
அக்காலத்தில் சித்தர்களின் சீவசமாதி இருந்த இடங்களில் கோயில்களை கட்டினார்கள். அங்கே எல்லாம் அவர்களின் அருளாற்றல் அபரிமிதமாக இருக்கும்.
அரசமரம், வேப்பமரம் வில்வமரம் இருக்கும் இடங்களில் இடங்களில் பிராண சக்தி அதிகமான கிடைக்கும். அது ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் தேவையான பிராண சக்தியைக் கொடுக்கும். அனைத்துமே காந்த அலை தான். காற்றையும் அலையாகத் தான் பெறுகிறோம். உணர்கிறோம்.
நல்ல நறுமணம் உள்ள மலரில் எப்படி ஈர்ப்பாற்றல் இழுக்கிறது அதன் பக்கம்.
சுடச்சுட சாம்பாரில் நல்லமணமும் அதுவே கெட்டுப் போய்விட்டால் அதே நறுமணம் கெட்டுப் போய் மணம் வீசும். இதுவும் அலையாகவே பெறுகிறோம்.
காந்த அலை மூலமே அலைபேசியிலும் உடனுக்குடன் அழைப்பைப் பெற முடிகிறது.
காந்தம் மூலமே நேர்மறை/எதிர்மறை ஆற்றலையும் பெற முடிகிறது.
எங்கெல்லாம் காந்தம் உள்ளதோ அங்கே எல்லாம் தூயவெளியில் பேரறிவாகவும்
சீவனுக்குள் சீவகாந்தமாகவும் செயல்படுகிறது.
அருட்தந்தை அவர்கள் மனிதனுக்குள் எங்கெல்லாம் மனம் குவிந்து காந்தம் திணிவு பெறுகிறதோ, அங்கிருக்கும் குற்றங்களைக் களைந்து சீவகாந்தத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் என்கிறார்கள்.
பாரதியார் வெள்ளம் என்று அன்றே காந்தத்தை பற்றி கூறிவிட்டார்கள்.
நமது மகரிஷி அதை எளிமையாக விளக்கிவிட்டார்கள்.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment