Wednesday, 22 August 2018

தினம் ஒரு மாற்றம் (22/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (22/08/2018)

*அவரவர் வாழ்க்கையின் சிற்பி அவரவர் எண்ணங்களே!* அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

ஒருவரின் நற்செயல் செய்யும் போது அது நற்பலன்களைக் கொடுக்கும். அதாவது மனம் முழுமையாக ஒன்றி ஒன்றை செய்யும் போது ஒருவர் எந்த அளவு கவனத்துடன் இருக்கிறார் என்பதே முக்கியம்.

பக்தி, ஆன்மிகம் இரண்டிலும்  கடமையை கர்மயோகமாக, மன ஓர்மையை இறையுணர்வாக, நற்பண்புகள் அறநெறியாகவும், அத்தனைக்கும் அடிப்படை ஒருவர் தன்னை நம்பி, தனது ஆற்றலில் நம்பிக்கை வைத்து, நற்செயல்களை புரிந்து, அதையே வாழ்க்கையிலும் கடைபிடிக்க வாழ்க்கை முறையை வகுத்துக் கொடுத்தார்கள் அந்நாளில் பெரியோர்கள், மகான்கள் சித்தர்கள்.

*கடவுளை வணங்கும் போது கருத்தினை உற்றுப்பார்* என்று அருட்தந்தை கூறினார்கள்.

கோயில்களில் கற்பூர ஆராதனை செய்யும் போது கண்களை மூடிக் கொண்டு ஒருவர் எதை வேண்டுகிறார்.. ?

மனம் அங்கு எதை நினைக்கிறது?

எந்த எண்ணத்திற்கு அழுத்தம் கூட்டுகிறோம்.?

இவை தகுதியுடையவர்களுக்கு  செயல் ஆகிறது.

ஒருவர் நினைக்கும் நினைப்பு நல்லவையாக இருத்தல் மிகவும் அவசியம் என்பது இதில் இருந்தே தெரிய வரும்.

அழுத்தம் கூடும் எண்ணமாக இருந்தாலும் சரி, அழுத்தம் அதிகம் இல்லாத எண்ணமாக இருந்தாலும் சரி... அது செயலாக மலர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை அனைவரும் சுயமாக சிந்தித்துத் தெளிய முடியும்.

*வாழ்க வளமுடன்* வாழ்த்து அலை செயல்படும் விதமும் அவ்வாறே...

அலையியக்கம், காந்தம் இரண்டும் ஒன்று தான். அதன் ஆற்றல் அளப்பரியது.

அதை உணர்ந்து செயல்படும் போது ஒருவர் முக்திக்கான வழியில் செல்கிறார் என்று பொருள்.

அன்புடன் ஜே.கே


No comments: