வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (28/08/2018)
வீடுகளிலும், பள்ளிகளிலும், அலுவலகங்களிலும், பொது இடங்களிலும் பிறருடனான பேச்சு வார்த்தை, நடந்து கொள்ளும் முறை ஒருவருக்கு எவ்வாறு அமைகிறது??
சில வீடுகளிலே குழந்தைகளுக்கு பெயர்களை வைப்பார்கள்...ஆனால் அந்த பெயரை வைத்துக் கூப்பிடுவதில்லை... கோபத்தில் ஐந்தறிவு விலங்கனிங்களின் பெயரை வைத்துக் கூப்பிடுவார்கள்.
பத்தாததற்கு கோள்கள் பெயரை வேறு கூப்பிடுவார்கள்.
ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எதை ஒருவர் நினைத்து எந்த மனஅலைச்சுழலில் கூப்பிடுகிறாரோ அந்தப் பெயருக்கு ஒரு அழுத்தம் கூடும். பிரபஞ்சத்தில் ஒரு அழுத்தம் பதியும். அந்த அதிர்வுகளினால் அழுத்தம் கூடி அந்தப் பெயருக்கான அதிர்வலைகளை அக்குழந்தைகளுக்கு அடி மனம் ஆழத்தில் சென்று அவ்வாறே விலங்கினத்தின் தன்மையாகவே செயல்படுவார்கள்.
ஆகவே தான் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் எதற்குமே காந்தம் உண்டு, ஈர்ப்பு உண்டு. அதற்கு அழுத்தம் கூடக் கூட அது செயலாகும் என்று கூறுகிறார்கள்.
தவறு என்று தெரிந்தும் தப்பு செய்தால் விளைவை இறைநீதி இம்மி அளவும் பிசகாமல் அளிக்கும்.
*குழந்தைகளை மட்டுமல்ல அனைவரையுமே தெய்வத்திற்கு சமமாக பார்த்தால் எதிரே நமது கண்ணாடியின் பிரதிபிம்பம் தான் என்பது புரியும்.*
*அதன் முன் நின்று நானே வைத்துக் கொள்கிறேன் என்று தன் பக்கம் கைகளை வைத்துக் கொண்டால் எதிரில் கண்ணாடியும் அவ்வாறே பிரதிபலிக்கும்.*
*நான் பிறருக்குக் கொடுக்கிறேன் என்று கைகளை நீட்டிப் பார்த்தால் எதிரே பிம்பமும் நானும் தருகிறேன் என்று கைகளை நீட்டும். எதை ஒருவர் எந்த தன்மையில் நினைக்கிறாரோ, பேசுகிறாரோ, பழகுகிறாரோ, அதே பிரதிபலிக்கும் நம்மிடம்.*
இவ்வளவு தான் விஷயம். காந்தமும் அவ்வாறே.
*நான்* என்பதை நாமாக/ இறைநிலையாகப் பார்த்தோமானால் அது பிரபஞ்சம் முழுவதும் பிரதிபலித்து அதுவும் நமக்கு ஒத்தும் உதவியுமாக இருக்கும். ஒற்றுமை ஓங்கும். வார்த்தைகளும் இனிமையாக மாறும்.
எதிரே இருக்கும் குழந்தைகள் நம் பிரதிபிம்பம் என்று உணர்ந்தால் திட்டவோ அடிக்கவோ தோன்றுமா?? சுயமாக சிந்தித்தேத் தெளிக....
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment