வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (25/08/2018)
குறள்:
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்(கு)
இனத்தியல்ப தாகும் அறிவு.
452
சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.
பலபேர் இன்பத்திற்கும்/ துன்பத்திற்கும் அவர்களின் மனமே காரணம்.
மனதை பக்குவப்படுத்தப் பழகிக் கொண்டால் போதும்.
இனம் இனத்தோடு சேரும் என்பார்கள். ஒத்த எண்ணம் உடையவர்களை ஈ.ர்க்கும் வல்லமையுடையது மனம்.
ஒருவர் தன்னைத் தானே ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும். மனதை சென்ற நாட்களில் எப்படி வைத்திருந்தார்? தற்போது எப்படி இருக்கிறார்? எப்படித் தன்னை திருத்தி இன்று தூய்மையாக இருக்கிறார் என்றும், வரும் நாட்களில் தன்னை மேலும் தூய்மையாக்கி, தனக்கும் பிறருக்கும் நலம் விளைவிக்க எண்ணம் கொண்டு மேலும் தூய்மையில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கே இப்பிறவி..
தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொள்ள அல்ல இப்பிறவி..
என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு சில விஷயம் பிடித்தமாக இருக்கலாம். அதுவே பிறருக்கு சங்கடங்களை உருவாக்கலாம். தனக்குப் பிடித்தவை என்பதற்காக பிறரிடம் திணிக்காமல் பிறரின் நலனில் அக்கறை கொண்டு சிலவற்றை தவிர்ப்பது நலம் உண்டாகும்.
வசதி வாய்ப்போடு....
அதாவது
கல்வி, அறிவு, பொருள், எண்ணம்... இவற்றில் மேன்மையோடு இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு என்ன செய்யலாம்? என்று சிந்தித்தால் செழிப்பு நீடிக்கும். வளம் பெருகும்.
பெருந்தன்மை அனைவரிடத்தில் வந்தால் அனைவரையுமே வாழ்த்தும் மனம் வரும் . பிறருக்கும் நலம் விளைவிக்கும்.
பண்பு, பணிவு, கல்வியறிவு, இயற்கையறிவு, உறைவிடம், பொருளாதாரம் என்பது அடிப்படையில் அனைவருக்குமே மிக மிக அவசியம்.
ஒருவரின் தகுதி பொறுத்தே அனைத்துமே வந்து சேர்கிறது.
அந்தத் தகுதி எப்படி வரும்??
தான் எதை ஒருவரிடம் எதிர்பார்க்கிறோம் அன்பா, பணமா, பொருளா? அதிகாரமா? இன்பமா? துன்பமா? பகையா? நட்பா? தனிமையா? கூட்டுறவா?ஒற்றுமையா? வேற்றுமையா?? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
எதை எதிர்பார்க்கிறோமோ அதைக் கொடுத்தால் அது தனக்கே திரும்பி வரும்.
சுயமாக சிந்தித்தேத் தெளிக..
அதுவே இறைநீதி.
எப்பொழுதும் பிறர் மனம் புண்படாத வண்ணம் நலம் விளைவிக்க நாட்டமாக இருத்தலே ஒருவருக்கு நலம் விளைவிக்கும் என்று அருட்தந்தை அவர்கள் கூறுகிறார்கள்.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment