Friday, 31 August 2018

தினம் ஒரு மாற்றம் (30/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்*
(30/08/2018)

இன்று
*"மனைவி நல வேட்பு நாள்".*   
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் தனது அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய தனது துணைவியார் அருளன்னை லோகாம்பாள் அம்மையார் அவர்களின் பிறந்தநாளை  முன்னிட்டு, அதை உலகமே, மனைவியை மதித்து நன்றி செலுத்தும் நன்னாளாக போற்றப்படுகிறது.

குறள்: இல்வாழ்க்கை 41

"இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை."

பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்.

மனைவியும் கணவரும் மனமொத்து ஒருவரின் எண்ணத்தை  குறிப்பறிந்து செயல்பட்டு, இல்லற வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் பாராட்டியும், நன்றி கூறியும், ஒத்தும் உதவியுமாக, அறநெறி வாழ்ந்து, பிறருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்க்கை எனும் பிறவிக்கடலை நீந்தி கடக்க முற்படவேண்டும்.

ஏனென்றால் மனிதப்பிறப்பு என்பது குடும்பம் என்ற இணைப்பிலே தான் முழுமை அடைய முடியும்.

வாழ்க்கை என்பது ஒரு உன்னதமான அனுபவம். அதை பலபேர் இனிமையாக கடக்கின்றனர் மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும், வாழ்கின்றனர்.

மனவளக்கலை பயிற்சிகளை மேற்கொண்டால் இனிமையாகக் கடக்க முடியும்.

ஒற்றுமையே குடும்ப உறவுகளின் அமைதிக்கு வழிவகுக்கும்.

இல்லற வாழ்வில் தம்பதிகள் அன்பும், மனநிறைவுடனும் இருந்தால் மட்டுமே தான் தன்னிடமும், தன்னைச் சார்ந்தவர்களிடமும், நல்லிணக்கம் பேண முடியும்.

கணவன், மனைவி உறவு என்பது ஒருவருக்கொருவர் பின்னிப் பிணைந்த புரிதலுடைய உறவு. வள்ளுவர் வாசுகி அம்மா போன்று, வேதாத்திரி மகரிஷி அன்னை லோகாம்பாள் அம்மையார்  போன்று.

தங்களது வாழ்க்கையை
மேன்மைப்படுத்தி, மேலும் பிறருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர்கள்.

வாழ்க்கை வாழத் தெரிந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அதற்கு அவரவர் எண்ணங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டாலே போதும். அதற்கு மனவளக்கலை பேருதவியாக துணை நிற்கும்.

அன்புடன் ஜே.கே

No comments: