வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
தினம் ஒரு மாற்றம் (24/08/2018)
அனைத்திற்கும் மூலம் ஒன்றே .. அதுவே சுத்தவெளி, தூயவெளி, வெற்றிடம், இறையாற்றல் (அதுவே வற்றாயிருப்பு, பேராற்றல், பேரறிவு, காலம்) அதுவே காந்தம் அதுவே ரசாயன மாற்றமாக உருவாகி அதிலேயே கரைந்து தன்மாற்றம் பெற்று மனிதன் வரை வந்துள்ளது என்று தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறுகிறார்கள்.
எங்கெல்லாம் தூய வெளி உள்ளதோ அங்கெல்லாம் அறிவு தனது ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதை மதிப்பதன் மூலம், அன்பின் அடிப்படையிலும் ஒத்தும் உதவியுமாக உள்ளது.
மனிதனாக பிறப்பெடுத்த இறைவன் மனிதனுக்குள் அறிவாக இருக்கிறார்கள்.
மனிதன் களங்கப்பட்டு துன்பம் அனுபவிப்பது ஏன்?
அவனது கருமையம் தூய்மையாக ஆன்மாவாக, வெற்றிடமாக அதுவே உயிராற்றலாக களங்கத்தை சுமந்து அதை தூய்மை செய்ய அறிவு செயல்படுகிறது.
இதை எப்படித் தீர்ப்பது? பல பிறவிகள் எடுத்து தனது பாவங்கள், புண்ணியங்கள் களைந்து ஒன்றுமே இல்லாது காலி இடமாக வைத்திருந்தால் இறைவனாக மாறலாம். எண்ணங்களை குறைப்பதன் மூலம், உடற்பயிற்சி செய்வதன் மூலம், செயல் விளைவு உணர்ந்து விழிப்புணர்வோடு அனைத்திலும் அளவுமுறை காப்பதின் மூலம். கடமையை செய்வதன் மூலம், பிரதி உபகாரம் எதிர்பார்க்காமல் இருப்பதன் மூலம், தொண்டாற்றுவது மூலம்.
வீடு கட்ட காலி இடம், வெற்றிடம் கிடைத்து வீடு கட்டி விட்டோம். பொருட்களை சேகரித்தோம். அங்கங்கே அடைசல், குப்பை போட்டு வைத்தோம். தூய வெளியாக, காலி மனையாக இருந்த இடம் இப்பொழுது என்னவாயிற்று.. அடைத்து வைத்திருப்பதால் பிரபஞ்ச சக்தி தேங்கிய இடத்தில் வர மறுக்கிறது. தூய்மையான வெளியையே களங்கமற்ற குப்பைகளற்ற வெற்றிடத்தையே இறைவன் இருப்பிடமாகக் கொள்வான்.
ஆறு ஆதாரங்களிலும் வெற்றிடம் உள்ளது. உடல் முழுவதும் ரத்தம் ஓடுவதற்கு ஒவ்வொரு செல் இருப்பதற்கும் இயக்குவதற்கும் அறிவு வெற்றிடமாக காந்தத்தை அளித்துக் கொண்டே இருக்கிறது உயிராற்றலாக..
ஒரு குழந்தை வளர்ந்து பெரிதாகும் போது வித்து வழியாக வந்த புலன் மயக்கம், ஆசை இவற்றால் மனதளவில் தேவையில்லாத எண்ணங்களுக்கு இடம் கொடுத்து, குப்பையை எனும் களங்கங்கத்தை நிரப்பிக் கொண்டே வந்தால் அங்கே இறைவனை உணர முடியுமா??
வெற்றிடமாக மனதை வைத்தால் தானே இறைவனை உணரமுடியும்... நற்சிந்தனைகள் தோன்றும். நற்செயல்கள் புரிய முடியும்.
பிறவிப்பிணியை தீர்க்கவல்லவா வந்தோம். காலத்தால் நல்ல எண்ணங்களை மனதிற்குள் போடும் போது பல பிறவிகள் எடுத்துத் தீர்க்க வேண்டியுள்ளது.
உடலுக்குள் எங்கெல்லாம் வெற்றிடம் உள்ளதோ அங்கெல்லாம் சிற்றறிவு வேலை செய்கிறது. அங்கெல்லாம் உயிராற்றல் ஊடுருவுகிறது. அதுவே உடல்உறுப்புகளை, மனதை இயக்குகிறது.
பிரபஞ்சத்தில் பேரறிவு வான்காந்தமாக வேலை செய்கிறது.
மனிதனில் சீவகாந்தமாக சிற்றறிவாக வேலை செய்கிறது.
உயிராற்றலாக இயக்கம் பெறும் போது சீவவித்துக் குழம்பில் உள்ள பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப கருவுக்கு மூலமான அறிவு தூய்மை பெற உதவுவதே ஆன்மாவின் வேலை.
சீவனுக்குள் சீவாத்மா.
பரத்தில் பரமாத்மா.
மனிதன் பழக்கப்பதிவில் ஐந்தறிவில் தன்னை இயக்க முனைகிறான்..
ஆறாவது அறிவாக, மனமாக இறைவனை உணர, முழுமைப்பேறு பெற மனவளக்கலை பயிற்சிகள் உதவுகிறது.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment