வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (11/08/2018)
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்
இரண்டே கேள்வி முன் வைத்தார்கள். அது என்ன?
கோள்கள் எல்லாம் எங்கே மிதக்கின்றன??
அதைத் தாங்குவது எது?
1) *தாங்கும் பொருளுக்கு வலிமை அதிகமா?*
2) *மிதக்கும் பொருளுக்கு வலிமை அதிகமா??*
விடை : எதை தாங்குகிறதோ அதற்கே வலிமை. நம்மை இந்த பூமி தாங்குகிறது என்றால் பூமி வலிமையுடையது என்று பொருள்.
இறைவன் என்பவன் எங்குமே நீக்கமற நிறைந்திருப்பவன். காந்த அலைகளாக இருப்பவன். அறிவாக இருப்பவன்.
எதை எல்லாம் நம்மால் செய்ய இயலவில்லையோ அதை எல்லாம் இறைவன் செய்கிறார்.
அதை புரிந்து கொள்பவர் இறையாற்றலை மதிக்கிறார்கள். எதிலும் இறைவனைக் காண்கிறார்கள். அன்பும் கருணையும் ஓங்குகிறது. விழிப்புணர்வுடன் செயல்களாற்றுகிறார்கள்
மனிதன் பஞ்சபூதங்களையோ, கோள்களையோ, உடல் உறுப்புகளையோ, தானாக உருவாக்கவும் இல்லை இயக்கவும் இல்லை.
அது தானாக இயங்குகிறதா?அறிவு இயக்குகிறது. அதுவே மெய்ப்பொருள்.
(உ-ம்)உடல் உள் உறுப்புகளை இயக்குவது யார்??
செரிமானம் செய்வது யார்??
மண், நீர், உலகம் உருவாக்கியது யார்??
இவ்வாறு பல கேள்விகளுக்கு விடையை சுயமாக சிந்தித்தால் அறிய முடியும்.
ஆனால் அதற்கு நுண்ணறிவு வேண்டும். மெய்ப்பொருள் அறிவது மெய்ஞானம்.
அதற்கு மன அலைச்சுழல் மிகவும் அமைதியாக இருந்துப் பழகினால் மட்டுமே மெய்பொருளை உணர முடியும்.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment