வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (10/08/2018)
குறள் எண் : 161
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு.
குறள் விளக்கம்
மு.வ : ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.
சாலமன் பாப்பையா : உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.
இப்பொழுதெல்லாம் மனிதர்கள் ஓடி ஓடி வேலைக்கு சென்று தனது மற்றும் குடும்பத் தேவைக்காக, பிள்ளைகளின் கல்வி மற்றும் அவர்களின் செலவுக்காக என்று பணத்தை ஆதாரமாகக் கொண்டே வாழ்கிறார்கள். உறவுகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு அந்த காலத்தில் வாழ்ந்தார்கள்.
வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகள் மூன்று உணவு, உடை, இருப்பிடம்...
இதற்குப் போக மிச்சத்தை பிறர்க்கு உதவி செய்திட ஒருவருக்கு மனம் வந்தால் வாழ்க்கைக்கு நலம் தரும்.
கல்வி பண்பை வளர்க்க வேண்டும்.
அறிவை வளர்க்க வேண்டும்.
அந்தக் காலத்தில் ஒற்றுமையும், விட்டுக் கொடுத்தலும் அதிகம் இருந்தது.
தொழில்நுட்பக் கல்வியும், இணையமும், மக்களுக்கு நன்மை, தீமை கலந்து தான் தருகிறது.. வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம் .. எல்லாமே Optional அடிப்படையில் இயங்குகிறது உலகம். (இது அல்லது அது).
ஆனால் எதை நிரந்திரமாக்குவது என்பதில் தான் பலபேருக்குக் குழப்பம்.
பெற்றோர் வளர்ப்பில், ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் முறையில், பிள்ளைகள் தங்களையும், உறவு முறையைக் கூறிக் கொண்டு அந்த உறவின் பெயரை பலப்படுத்தும் ஒழுக்கம் வரவேண்டும்.
பள்ளிக் கூடத்தில் ஆண் பெண் சகோதர உணர்வுடன் பிறரைப் பார்க்க பெருநோக்கோடுப் பழகக் கற்கின்றனரா??
அல்லது பொறுக்க முடியாமல் பொறாமை குணம் வளர்கிறதா??
விளையாட்டுப் போட்டி என்கிற பெயரில்
ஒற்றுமை வலுப்படுகிறதா?? அல்லது மற்றவைகளை வளர்க்கின்றனரா?
ஒருவரின் முன்னேற்றம் பிறருக்கு தொந்தரவாக உள்ளதா??
எது ஒருவருடைய மனதைத் தூண்டுகிறது?? அல்லது மாசுப்படுத்துகிறது? ஒருவரின் தரமான எண்ணம் மட்டுமே பிறவிப்பயனுக்கு வழிகோலும்.
நற்பண்பில் தான் அனைத்தும் கிட்டும். செயல் ஒழுக்கம் கூடும்.
அந்தத் தகுதி மனிதர் அனைவருக்கும் உண்டு.
தகுதியையும் தரத்தையும் பெருக்கிக் கொள்ளவே இப்பூவுலகில் பிறந்திருக்கின்றோம்.
இழிபிறப்பு சாதி மதத்தினால் இல்லை. மனிதரின் எண்ணத்தினால் மட்டுமே உள்ளது. அதை ஆய்ந்து தெளிய ஆறாவது அறிவை தீட்ட இறையுணர்வும் அறநெறியும் இயல்பாக அனைவரிடத்தில் இருப்பதை உணர முடியும்.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment