Thursday, 30 August 2018

தினம் ஒருமாற்றம் (26/08/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம்  ஒரு மாற்றம்* (26/08/2018)

"மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்".

பொருள்:

ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனமும் செயலும் தூய்மையானவையாக இருக்கும்.

Couplet 455

Both purity of mind, and purity of action clear,
Leaning no staff of pure companionship, to man draw near.

மனிதன் நற்செயலுக்கேற்ற விளைவே நல்ல விளைவை கொண்டு வந்து சேர்க்கும்.

'தீதும் நன்றும் பிறர் தர வாரா'
ஒருவரின் எண்ணம், குணம், பண்பை சார்ந்தே  ஒருவருக்கு அனைவருடனான நட்பும், நல்லிணக்கமும் அமையும்.

அதற்கு ஒருவரது தனிப்பட்ட  குணமும், பண்பும் காரணம்.

தூய நட்பு உயர்நட்புக்கு வழி வகை செய்யும். மேன்மை பெறச் செய்யும்.

வாழ்க்கையில் அனைத்து ஏற்றதாழ்வுகளிலும் நட்பின் தொடர்பு நீடிக்கும்.

பலன்களை எதிர்பார்த்து வருவது அல்ல நட்பு..

அனைத்திற்குமே அன்பே அடிப்படை.
நட்பிற்கு மட்டுமல்ல அன்பு ..
அனைத்து வகையான நல்லுறவுக்கும் அன்பே அடிப்படை.

ஆனால் அந்த அன்பை ஒருவர் தவறாகப் பெற நேருமானால் அங்கே அதே அன்பு நெருப்பாக மாறும்.

இதையே சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்.

இயற்கை சீற்றம் என்பது கூட இப்படித்தான் போலும்.

உண்மையில் இயற்கை அன்பும் கருணையுமானது. மனிதனின் செயல்களினால் தான் நீர் வரத்தும்... நீர் வராததற்கும் காரணம் என்று தோன்றுகிறது.

இயல்பாக இயற்கையை அப்படியே பாதுகாத்து வந்தால் ஒருவருக்கு இயற்கை நட்புடன் இருக்கும்.

மனிதன் இயற்கையுடன், உறவுகளுடன்,  நட்புடன், நல்லிணக்கத்துடன், ஒத்தும் உதவியுமாக இருந்தால் சீற்றம் எப்படி வரும்?

நீர் வளம் மிக்க மரங்களை நடுவோம். மனசாட்சிக்கு ஒத்த அறிவிற்குப் பொருந்திய நட்புடனான, நற்செயல்களை புரிவோம்.

செயல்விளைவை உணர்ந்து செயல்கள் புரிந்தால் அனைத்து வகையிலும் இயற்கை மனிதனுக்கு சோதனை தராது அதற்கு பதிலாக சாதனை புரியத் தூண்டும்.

அன்புடன் ஜே.கே

No comments: