வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (27/08/2018)
ஆசான் அருட்தந்தையின் *மனவளக்கலை*, மக்கள் அனைவரும் வாழ்க்கையில் தவத்தையும், தற்சோதனையும், உடற்பயிற்சியையும், செய்து கொண்டு, தன்னைத் தானே மேம்படுத்திக் கொண்டு வாழ்ந்தும், வாழ்த்தியும், இனிமையாக வாழ்கின்றனர்.
உலகியல் வாழ்க்கையில் வரும் அனைத்து சவால்களையும், தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், அன்புடனும், நிதானத்துடனும், எதிர்கொண்டு அணுகும் போது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.
அதற்குக் காரணம் (மனம் + வளம் + கலை) அருட்தந்தை அவர்களின் மனத்தை வளப்படுத்தி செம்மையாக வைக்கப் பழக்கத்திற்கான பயிற்சியை முறையாக செய்து வருவதால் இந்த மாற்றத்தில் ஏற்றம் கொள்ள முடிகிறது.
அருட்தந்தை அவர்களின் பயிற்சிகள் அத்தனையும் மிகச் சிறப்பான பயிற்சிகள். எளிமையான பயிற்சிகள். எந்த வயதினரும் கற்கக் கூடியக் கல்வி முறை. வாழ்க்கையை எளிமையாக கையாளக் கூடிய பயிற்சிகள்.
வாழ்க்கையில் மனவளக்கலை பயிற்சி ஒன்று போதும்.
*வாழ்க வளமுடன்* வாழ்த்து போதும்.
அனைத்து வளங்களும் ஒருவரைத் தேடித் தானாக வரும்.
இது வெறும் யோகப்பயிற்சி மட்டும் அல்ல. வாழ்க்கையின் வெற்றி, மனநிம்மதி, மனநிறைவுக்கான பயிற்சிகளாகும்.
இதை தத்துவமாகப் பார்க்காமல் வாழ்க்கையில் கடைபிடித்தாலே போதும். மனம் செம்மையுறும்.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment