*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
*தினம் ஒரு மாற்றம்* (15/08/2018)
72வது சுதந்திர நாள் இன்று.
*உலக நல நாட்டம்*
*"ஓர் உலக ஆட்சி உயர் ஒழுக்கத்தோடு உலகினிலே குழந்தைகளை வளர்க்கும் திட்டம் பார் முழுதும் பொருள் துறையில் சமநேர் நீதி பலநாடும் ஒன்றிணைந்த பொருளாதாரம் சீர்திருத்தச் சிக்கனமாம் சிறந்த வாழ்வு தெய்வநிலை அகத்துணரும் இறைவணக்கம் நேர்வழியில் விஞ்ஞானம் பயனாய்க் கொள்ளும் நெறி முறைகள் இவையிணைந்த வாழ்வு காண்போம்."*
அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
சுதந்திரம் அனைவரும் முழுமையாக பயன்படுத்துகிறோமா?
ஒற்றுமை, அஹிம்சை இதையே ஆயுதமாக நம் நாட்டு விடுதலைக்கு பயன்படுத்தினார்கள் அந்நாள்.
இந்நாளில் சுதந்திரம் கையாளும் விதம் ஒருவரை பல செயல்களில் சுதந்திரத்தை அளவுமுறை மீறி பயன்படுத்தி ஏதாவது ஒன்றில் தன்னைத் தானே மூழ்கடித்துக் கொள்கிறார்கள்.
(உ.ம் ) அலைபேசி, மடிக்கணினி, கணினி, இணையதளம், விளம்பரம், தொடர் சீரியல், தர்க்கம் செய்வது....
எது ஒன்றிலும் தீவிரம் காட்டுவதும், ஒருவரைத் தூண்டச் செய்யும் விஷயமும்.. அளவுமுறையோடு இருப்பது மட்டும் தான் நன்மையைத் தரும்.
அளவுமுறையுடன், அனைத்தையும் மதித்து, ஒழுங்குமுறையோடு பயன்படுத்தினால் இயற்கை ஒருவருக்கு சாதகமாகத் துணை நிற்கும்.
சுதந்திரத்தை முறையாகப் பயன்படுத்தி நல்வழியில் நடந்து இவ்வுலகத்தை மேம்படுத்தும் செயலில் ஈடுபடுவது உலக மக்கள் ஒற்றுமைக்கு வழி வகுக்கும்.
மேற்கூறிய மகரிஷி அவர்களின் பாடலின் பொருளுணர்ந்து செயல்பட அனைவருக்குள்ளும் பொதுநலம் ஊடுருவும்.
அன்பும் அறனும் ஒற்றுமையும் ஓங்கும்.
*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment