வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (03/06/2018)
*"விருப்பத்தை ஒழித்துவிட முயல வேண்டாம்.*
*வெறுப்பை ஒழித்தாலதுவே மேன்மை நல்கும்."*
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
-ம.வ.க பாகம் 1 (பக்-107)
பெற்றோரும், வீட்டுப் பெரியவர்களும்,
குழந்தைகளின் வளர்ப்பு விசயத்தில் சின்னச் சின்ன தவறுகள் செய்யும் போது குழந்தைகளின் மனதில் ஆழப் பதிந்துவிடும்.
ஒரு வீட்டிற்குள் இருப்பவர்கள் உடன் இருப்பவர்களுடன் பகிர்ந்துண்ண கற்றுக் கொடுப்பது பெற்றவர்களின் கடமை.
ஏதோ ஒரு அறையில் கதவை மூடிக் கொண்டு ரகசியமாக உண்ணுதல், ரகசியமாக ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் தவறாகக் கூறுவது, இவ்வாறான பழக்கங்கள் குழந்தைகள் மனதில் மனநலம் சார்ந்த சிக்கலில் கொண்டுவிடும்.
இவ்வாறான தேவையில்லாத உணர்வு நிலையை குழந்தைகளிடம் உருவாக்கினால், நாளாக நாளாக பெற்றோரிடமே அது திரும்பும். வெறுப்பை கற்றுக் கொடுக்காமல் அனைவரையும் நேசிக்கக் கற்றுக் கொடுத்தலில் தான் ஆரோக்கியத்தின் இரகசியம் உள்ளது.
மனதை விரிவுப்படுத்த கற்றுத்தர வேண்டுமே தவிர குறுகிய பார்வை, *தான்*, *தனக்கு* என்று வைத்துக் கொள்வது சுயநலத்தையே வளர்க்கும்.
சுயநலம் என்பது *தான்* மட்டுமே அனைத்தையும் அனுபவிக்க வேண்டும். *தனக்கு* மட்டுமே எல்லாம் சொந்தம் என்று நினைப்பது.
பெருந்தன்மையும், மகிழ்ச்சியும், பகிர்தலிலும், விட்டுக் கொடுத்தலிலுமே, உள்ளது. இதை உணர்ந்தால் மனவிரிவு வரும்.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment