வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (05/06/2018)
இச்சை முதல்படி *காமதேனு.* வென்பார்
இச்சை ஒழுங்குற்றால் *கற்பகம்..* என்பார்கள்
இச்சை உயர்நிலை *சிந்தாமணி...* யாகும்
இச்சை நிலைக்கேற்ப இம்மூன்று பேர் பெறும்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
பேராசையே துன்பத்திற்குக் காரணமாக அமைகிறது.
தகுதிக்கு மீறிய ஆசையும், எதிர்பார்ப்பும் இருந்துவிட்டால் அதை அடைவது கடினமாகிப் போகிறது..
எனது தந்தை யார் என்று தெரியுமா?? எனது பரம்பரை என்னவென்று தெரியுமா?
எனது பின்னணி என்னவென்பது புரியுமா??
என்று பேசுபவர்கள் பிறரை சுட்டிக்காட்டி தனது அடையாளத்தை முன்னிலைப்படுத்த விரும்புகிறார்களே தவிர., *"தான்"* என்ன செய்கிறோம்?
*தனது கடமை என்ன?*, *தான் பிறந்த நோக்கம் என்ன?* என்பதை உணர்ந்து தன்னை முன்னிலைப்படுத்தினால் இந்த ஆணவம், கர்வம் இதெல்லாம் வரவே வராது.
ஏனென்றால் உழைப்பின் மதிப்பையும், உயர்வையும், உணர்ந்தவர்கள் எப்பொழுதும் தன்னை மதிப்பது போலவே பிறருக்கும் மதிப்பளிப்பார்கள்.
தன்னடக்கத்துடன் திகழ்வார்கள்.
பணிவுடன் வாழ்வார்கள்.
பெரியவர்களின் சொற்களுக்கு எதிர்பேச்சு கொடுக்காமல் 'சரி' 'சரி'என்று கூறிவிட்டு அவர்கள் மனம் நோகவிடாமல் பண்புடன் நடந்து கொள்வார்கள்.
சுயமாக
முடிவெடுக்கும் தைரியமுடையவர்கள். தன்னம்பிக்கை மிக்கவர்கள்.
ஆகவே.. யார் வழி வந்தோம்.., எவ்வழி வாழ்ந்தோம்,, என்பதை விட தான் வாழும் காலத்தில்.. பிறருக்காக வாழ்ந்து காட்டுவதிலும், தன்னுடைய சந்ததியினர் அவர்களின் காலத்தில் பாட்டன் பூட்டன் பெயரை நிலைநிறுத்தினாலே வாழ்க்கையின் பொருள் விளங்கும்.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment