வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (26/06/2018)
*குருவின் சேர்க்கை*
"எப்பொருளை எச்செயலை எக்குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினிலும் மாற்றங் காணும்
இப்பெருமை இயல்பூக்க நியதி ஆகும்
எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்
தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்."
*தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி*
அவரவர் எண்ணத்திற்க்கேற்ப எல்லாமே வாழ்க்கையில் அமைகிறது.
வாழ்க்கையில் ஒருவர் பிறருக்காக பிறர் நலனுக்காக செய்யும் செயலிலே மட்டுமே நிறைவு காண முடியும்.
அதிலே தான் மனநிம்மதி உள்ளது. ஆனால் அந்த செயலை செய்துவிட்டு, இந்த உதவியை இவருக்காக செய்ததற்கு பின்னாளில் தனக்கு அந்த உதவி வேறு வழியில் அவரிடமிருந்து கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் அது பிரதிபலன் ஆகும். கடமையை செய்வதே ஒருவர் கடமை. அதற்கு விளைவு இறைவனே அளிப்பார். இறைநீதியும் அதுவே.
ஏனென்றால் அன்று அந்த உதவி அந்த நபருக்கு செய்ய இந்த நபரை நியமித்திருக்கிறார் கடவுள். அவ்வளவு தான்.
தன் உடல் என்பது ஒரு கருவி அல்லது வாகனம் மட்டுமே என்பதில் அனைவரும் கவனம் செலுத்தி குருவை மதித்து வாழும் போது அனைத்து நலன்களும் தானாக வந்து சேரும் என்பதை அனுபவத்தில் உணர முடிகிறது.
உயர்பண்புகள் மேலும் உயர்கின்றது.
மேன்மை என்பது அனைத்து வகையிலும் உண்டு . ஒருவர் தன்னை நேசித்தும் பிறரை நேசித்தும் குருவை மதித்து வாழும் போதும் இயல்பாக உயர்வு வருகிறது.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment