வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (30/06/2018)
குறள்:262
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
குறள் விளக்கம்:
உறுதிப்பாடும், மன அடக்கம் உடையவருக்கே தவத்தின் பெருமை பொருந்துவதாகும்; எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் முயற்சியாகும்.
(கேள்வி - பதில்)
1) தவம் மட்டும் செய்து தற்சோதனை செய்யாமல் ஒருவர் தன்னை மேன்மை பெற முடியுமா??
2) தற்சோதனை செய்து தன்னை தூய்மை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளவருக்கு தவம் எந்த வகையில் பலன் கொடுக்கும்?
பதில்:
1) தன்னை திருத்தி தன்னை தூய்மை செய்து கொள்ள வேண்டும் என்கிற தற்சோதனை இல்லாத தவம் மேன்மை பெறச் செய்யாது.
தத்துவத்தை தத்துவமாக படித்து எடுத்துரைக்க முடியுமே தவிர, அந்த இயல்பான தவ உணர்வை உணர முடியாது.
அந்தந்த நுண்ணிய அலைச்சுழல் விரைவை தக்க வைக்க, தற்சோதனையில் மேன்மை அடைந்து பேரன்புடன் மனவிரிவுடன் தவத்தில் பிரகாசிக்க முடியும்.
2) ஒருவரது எண்ணம் சங்கல்பமாக வைக்கும் போது தவத்தில் அதற்குத் தான் வலிமை கூடுகிறது.
தன்னைத் தகுதி படுத்திக் கொள்ள ஒருவர் முனையும் போது, தற்சோதனை செய்தும், செயலை தூய்மை செய்தும், தவத்தில் ஆழ்ந்து செல்லும் போதும், தவம் மற்றும் தற்சோதனை ஒருவரை மேன்மை அடையச் செய்கிறது.
எண்ணத் தூய்மையே எல்லாவற்றிற்கும் வழிவகை செய்யும். மனவிரிவு பெற முடியும்.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment