Friday, 8 June 2018

மௌனத்தின் சிறிய விளக்கம் (08/06/2018)

மௌனத்தில் மட்டுமே நமக்குள் இருக்கும் இறைவன் நம்மிடம் பேசிக் கொண்டிருப்பார்.
எல்லா கேள்விகளுக்கும் விடையும் அளிப்பார்.

நீ பேசாத போது இறைவன் பேசுகிறார் என்பது இது தான்.

மௌனம் என்பது தவம் செய்து பழகிப் பழகி மனத்தை தூய்மையாக வைக்கப் பழகும் போது இறைவன் அறிவை ஆற்றலாகத் தருகிறார். எண்ணங்களை குறைக்கும் போது வெற்றிடம் அதிகமாகிறது.

வெற்றிடம் என்பது சுத்தவெளி. சுத்தவெளியே மூலம். மூலமே தெய்வம்.
எவ்வளவு வெற்றிடமாக மனத்தை வைக்கிறோமோ அவ்வளவு நெருக்கமாக இறைவன் நம்மிடம் இருப்பார் என்பது பொருள்.

அன்புடன் ஜெ.கே

No comments: