வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (10/06/2018)
"சுத்தவெளி சூன்யமாய் நிறைந்த தன்மை
சூட்சமமாய் அனுபவமாய் அறிந்து நிற்கும் தத்துவத்தின் முடிவான தானேயான தனையறிந்த விந்தையது தர்க்கம் வேண்டாம்."
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
இறைவன் தான் இப்பிறவியில், இவ்வுடலை, தேர்ந்தெடுத்து பாவங்களை கரைக்கிறார்.
அவன் தூய்மை பெற்று இறைநிலையோடு கலந்து விடட்டும் என்பதற்காகவே.
ஆனால் தனக்குள் தான் இறைவன் இருக்கிறார் என்பதற்கும், இறைவன் தான் அனைத்திற்குமே ஆதாரமாக இருக்கிறார்..., என்பதற்கும் வேறுபாடு உள்ளது..
கட + வுள் என்பது தனக்குள் இருக்கும் இறைவனை உணர்வதற்கும், , அவரே தன்னை தாங்கிப் பிடித்துக் கொண்டு இருக்கிறார் என்பதற்குமான வேறுபாடு அது. அப்பொழுது அகங்காரம் அழிந்துவிடும்.
இறையாற்றல் தான் ஒருவரை வழிநடத்திச் செல்ல முனைகிறது என்பதை ஒருவர் உணர்ந்தால்......... தவறுகள் செய்வதை நிறுத்தி விட்டு விழிப்புணர்வில் நற்செயல்களாற்றி, பிறவித் தொடரை அறுத்துவிட மனிதன் முனைப்பில் ஈடுபடுவார்.
ஆனால் தனக்குள்ளே இறைவன் இருக்கிறார் என்று அறியாமலேயே சிலர் தவறுகள் இழைக்கிறார்கள். சிலர் அறிந்த போதும், தவறுகளை இழைக்கும் போது இறைவனை மறந்து போய் விடுகிறார்கள்.
புலன் வயத்தால், தன்முனைப்பால், தவறுகளை இழைத்து மேலும் மேலும் பல பிறவிகளைத் தொடர்கிறார்கள் மனிதர்கள்.
எங்கே தன்முனைப்பு எனும் Ego ஆட்சி செய்கிறதோ, அங்கே இறைவனை மனிதன் மறக்கிறான்.
எங்கே அன்பு ஆட்சி செய்கிறதோ, அங்கே இறைவன் மனிதனை மறப்பதில்லை. அருகிலேயே வசிக்கிறார்.
மறப்பது மனித மனம் தானே தவிர, இறைவன் இல்லை என்பதை உணர வேண்டும்.
அப்பொழுதும் இறைவன் தன் பால் ஈர்க்கவே முயற்சிக்கிறார்....ஆனால் கர்மா, செயல் விளைவு, இறைநீதி என்று ஒன்று இருக்கிறதே??
கோள்களை தாங்கியிருக்கும் இந்த சுத்தவெளிக்கு ஆற்றலும் அறிவும் உண்டென்றால்....
மனித உடலை தாங்கியிருக்கும் ஆன்மா என்கிற இறைவெளிக்கும் அறிவும், ஆற்றலும் உள்ளது என்பது நினைவில் அனைவரும் வைக்க வேண்டும்.
அருட்பேராற்றலின் அன்புக் குரலை கேட்க எப்பொழுதும் சித்தமாக இருக்க வேண்டும்.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment