Monday, 4 June 2018

தினம் ஒரு மாற்றம் (04/06/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (04/06/2018)

வரும் பொழுது மனிதன் எதையும் கொண்டு வரவில்லை.

போகும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. அவனின் வாழ்ந்த அடையாளத்தைத் தவிர.

எப்பேற்பட்ட மனிதர் இவர்.  நல்ல மனிதர் என்று பிறரின் மனதில் வாழ்பவர்களே இறந்தும் வாழ்பவர்களாவர்.

வாழும் நாட்களில் யாருக்கும் எந்த உதவியும் செய்ய மனம் வராமல், கொடுத்து உதவுபவர்களையும் தடுத்து வாழ்பவர்... வாழும் காலத்தில் இருப்பவர்கள் இப்பொழுதிலிருந்தாவது தங்களை மேம்படுத்திக் கொள்வது நல்லது. மாற்றம் அவரவரிடம் இருந்து தான் வர வேண்டும். பிறரிடமிருந்து அல்ல.

மனமுவந்து எதையுமே பிரதிபலன் எதிர்பாராமல் செய்வதினால் மட்டுமே ஒருவரின் பெயர் நிலைக்கும்.

புண்ணியம் என்பது இது தான்.

*எண்ணம், சொல், செயலால், தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, உயிருக்கோ, உணர்ச்சிக்கோ, நன்மையை மட்டுமே ஒருவர் நாடினால் அதுவே உயர் ஒழுக்கம் ஆகும். அதுவே சிறந்த பண்பாகும்,* என்று நமது ஆசான் அருட்தந்தை அவர்கள் கூறியுள்ளார்கள்.

அவர்கள் காட்டிய நல்வழியில் நடந்து நற்பண்புகளைப் பெறுவோம். கருமையத் தூய்மை பெறுவோம்.

அன்புடன் ஜெ.கே

No comments: