வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (19/06/2018)
"தப்புக்கணக்கிட்டுத் தான் ஒன்று எதிர்பார்த்தால் ஒப்புமோ இயற்கை விதி?, ஒழுங்கமைப்புக்கேற்றபடி, அப்போதைக்கப்போதே அளிக்கும் சரி விளைவு,
எப்போதும் கவலையுற்று இடர்படுவார் இதை உணரார்".
*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்*
வீட்டில் உள்ளவர்களிடமும், வெளி உலகிலும் எதைப் பார்த்தாலும் நிறைவை பார்க்க மனம் வருகிறதா??
ஒரு வெள்ளைத் தாளில் கருப்புப் புள்ளி மட்டுமே இருக்கிறது. இதில் என்ன தெரிகிறது என்றால் வெள்ளை நிறமே எல்லா பக்கங்களிலும் தெரிகிறது என்று பதில் அளிப்பதில்லை. பதிலாக. கருப்புப் புள்ளி இருப்பதையே சுட்டிக் காட்டத் தோன்றுகிறது..
ஏனென்றால் குறையை பார்த்தும், குறை பேசியும், பிறரை கேலி பேசியும் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டார்கள் ஒரு சிலர்.
நிறையை பார்க்க யார் மாற வேண்டும்?? மக்களா??
எதை மாற்ற வேண்டும்?? சமுதாயப் பழக்கத்தையா??
தன்னை ஒருவர் மாற்றிக் கொண்டாலே போதும்.. தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஒருவர் நினைக்க வேண்டும். அப்பொழுது தான் மாற்றம் நிகழும்..
நான் இப்படித் தான் இருப்பேன் என்று வாதிப்பவர்களால் அவர்களுக்கான மாறும் கால நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டியது தான்..
அதுவே பிறவித் தொடராக தன்மாற்றம் பெறுகிறது.
மாறுவதற்கான சந்தர்ப்பத்தை இறைவன் அளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால் ஈகோ என்கிற தன்முனைப்பு தடுக்கிறது.
தன்முனைப்பு என்கிற தலைக்கனத்தை விட்டொழித்தால் தவிர மனதில் அமைதி நிலைக்குமா?? சுயமாகவே சிந்திக்க வேண்டும்.
இறைவன் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் சந்தர்ப்பம் தான் இந்த மனிதப் பிறப்பு.
இப்பிறப்பில் தன்னை தூய்மை செய்யவும், தன்னை உணரவும் கடவுள் அளிக்கும் வாய்ப்பை கண்டதில் மனதை செலுத்தி தவறாக பயன்படுத்தினால் அதற்குண்டான பலனையும் அவரவரே அனுபவிக்க நேர்கிறது. இதுவே இறைநீதி.
உணவு உண்ட பின் உணவை சீரணிப்பது மனிதனா.? மனிதனுக்குள் இயங்கும் உறுப்புகளா?? அதன் அறிவாற்றலா??
ஆனால் சீரணாமாகிறது எப்படி??? மனிதன் அந்த வேலையைச் செய்யவில்லை என்பது மட்டுமே தெரியும். உணவை உண்ணும் செயலை மட்டுமே செய்கிறான். சீரணித்து கழிவை வெளியேற்றும் விளைவு எங்கிருந்து வருகிறது.. இறைநீதி அனைத்தையும் ஒழுங்காகவே செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தால் மனிதன் அனைத்தையும் மதித்து வாழ்வான்.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment