வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (28/06/2018)
எந்த ஒன்றுமே அடக்கமாக இருந்து ஆற்றலை வெளிப்படுத்துவதில் தான் அதற்கு மதிப்பு அதிகம் கூடுகிறது.
அடக்கம் என்பது அடக்கமாக இருக்கும் வரையே அதற்கு மதிப்பு.
இந்த வெளியில் அனைத்தும் அடக்கமாக இருப்பது போல், பூமிக்குள் பஞ்சபூத கூட்டு அடக்கமாக இருப்பது போல், கடலுக்குள் நீர் அடக்கமாக இருப்பது போல்,
மண்ணுக்குள் விலை மதிப்பற்ற செல்வம் அடக்கமாக இருப்பது போல், காந்தம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அலைகளை அடக்கமாக வெளிப்படுத்துவது போல்,
மனிதனுக்குள் இறைவன் அடக்கமாக இருந்து காந்தத் தன்மையில் அறிவாற்றலாக, இறைசக்தியை உணரக்கூடிய தன்மையை உணரப் பெற்றிருக்கிறான் மனிதன்.
அதன் ஆற்றலை புரிந்த மனிதனும் அடக்கமாக இருந்தால் மட்டுமே அவனின் மதிப்பு கூடும். தன்னிலையை அறிய முடியும்.
மனிதன் அதை உணர்ந்து விழிப்புணர்வில் செயலாற்றும் போது இறைவனே துணை இருந்து அத்தனை செயல்களுக்கும் நல்விளைவை தருவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.
'ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.'
- திருக்குறள்.
பொருள்: ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது. 126
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment