28-06-2018
ஞானக் களஞ்சியம் கவிகள்
- வேதாத்திரிய தத்துவ விளக்க உரைகள்
*மெய்ப்பொருள் பூஜ்ஜியம்*
*கவி: 2*
எல்லாம்வல்ல தெய்வமது;
எங்கும் உள்ளது நீக்கமற;
சொல்லால் மட்டும் நம்பாதே;
சுயமாய் சிந்தித்தே தெளிவாய்!
வல்லாய் உடலில் இயக்கமவன்;
வாழ்வில் உயிரில் அறிவுமவன்;
கல்லார் கற்றார் செயல்விளைவாய்க்
காணும் இன்பதுன்பமவன்.
அவனின் இயக்கம் அணுவாற்றல்,
அணுவின் கூட்டுப் பக்குவம்நீ!
அவனில்தான் நீ! உன்னில் அவன்!
அவன் யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால் நீ சிறியோன்;
அவனை அறிந்தால் நீ பெரியோன்;
அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்,
அறிவு முழுமை அது முக்தி. (1973 ஜனவரி)
*தத்துவஞானி வேதாத்திரி மகரிசி*
மனிதனால் செய்ய முடியாததையெல்லாம் செய்யக்கூடிய மாபெரும் ஆற்றல் மனிதனிலிருந்து இயங்குகிறது. பிரபஞ்சத்தையே இயக்குகிறது. அவ்வாற்றலை சிந்தனைவாதிகள் இயற்கை என்கிறார்கள். விஞ்ஞானிகள் பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல் என்கிறார்கள். மெய்ஞானிகளாகிய தத்துவவாதிகள் தெய்வம் என்கிறார்கள். அது அங்கு, இங்கு என்று இல்லாமல் எல்லா இடங்களிலும், எல்லாப் பொருட்களிலும், எல்லா இயக்கங்களிலும் எல்லா விளைவுகளிலும் குறைவில்லாமல் நீக்கமற நிறைந்துள்ளது என்று முன்னோர்கள் கூறியுள்ளதைக் கேட்டு, அதையே மற்றவர்களுக்கும், பிற்காலத்தவர்களுக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
அவ்வாறு கூறுவதற்குக் காரணமாயிருக்கும் அறிவை சிந்தனை மூலமாக உணர்ந்து தெளிவடைய வேண்டும். சிந்தனையானது மன அமைதியிலும், ஓர்மையிலும்தான் வரும். வலிமையான உடலை இயக்குவதும், உயிராக இயங்குவதும், அறிவாக உணர்வதும் அதே தெய்வம்தான் என்பதை உணரலாம். இயக்குவது அறிவு. இயங்குவது உயிர். உணர்வது மனம். இவையெல்லாம் எல்லைகட்டிய உடலுக்குள் இருப்பவை. இவற்றைப் பற்றியெல்லாம் கற்றவர்களாயிருந்தாலும், கற்காதவர்களாக இருந்தாலும், அவர்களின் செயல்பாடுகளில் மலரும் விளைவு இன்பம் அல்லது துன்பம் என்பது தெய்வ நியதியாகும்.
பிரபஞ்சம் முழுவதும் இருப்பாக உள்ள தெய்வம், தன் ஆற்றலால் இப்படித்தான் இயங்க வேண்டும் என்ற இயல்பூக்கமாகிய அறிவால் அணுக்களாகி அவைகள் கூடிய கொத்தியக்கம்தான் சடப் பொருட்களாகவும், ஜீவன்களுமாகத் தன்நிலையில் மாற்றம் பெற்றுள்ளது. ஆகவே உனக்குள்ளாக தெய்வமும், தெய்வத்திற்குள்ளாக நீயும் இருப்பதை உணரும்போது, தெய்வமும் நீயும் பிரிவற்ற நிலையில் ஒன்றாகிவிட முடியும். தெய்வநிலையை நீ மறந்தபோது, மனிதன் என்ற சிறிய நிலையை அடைகிறாய். தெய்வத்தோடு இணைந்திருக்கும்போது நீயும் அதே நிலையையடைவதால் பெரியோன் ஆகிறாய். சிற்றறிவைப் பேரறிவோடு இணைக்கும்போது எல்லாப் பொருட்களிலும் தன்னையும் தன்னில் எல்லாப் பொருட்களையும் உணரலாம், அந்நிலை கைவரப் பெற்றால், அதுவே முக்தி, மோட்சம், முழுமைப்பேறு ஆகும். இதுவே மனிதப் பிறவியின் நோக்கமும் உரிமையும் ஆகும்.
*விளக்க உரை: மு.நி.பேரா. இரா.மாரியம்மாள் மோகன்தாஸ்*
வேதலோக அன்பு நிலையம் அறக்கட்டளை
K.Pudur MVKMM Trust. Madurai
www.facebook.com/vethathiri.gnanam

No comments:
Post a Comment