Wednesday, 27 June 2018

தினம் ஒரு மாற்றம் (27/06;2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (27/06/2018)

திருக்குறள்
"நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு."*

விளக்கம்:
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.

Explanation:
The world applauds the character of those whose usefulness results from their equity and charity
❕❕❕❕❕❕❕❕
பிறர் மாற வேண்டும் என்றே ஒருவர் நினைக்கிறார்.

*நான் நினைச்சது மத்தவங்க செய்யணும்.. கேக்கணும்.. அப்படின்னு...*

ஆனால் நினைப்பில் அது எதிர்பார்ப்பு ஆகிவிடுகிறது..

அந்த எண்ணம் நடக்க அதற்குரிய தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்பொழுதும் அதிகாரம் ஆணவமாக மாற அனுமதிக்கக் கூடாது.

சொல்வதை அதிகார தொணியில் சொல்லாமல், அன்புடன் சொல்வதையே அனைவரும் எதிர்பார்ப்பார்கள்.

அதிகாரம் என்பது பேச்சில் இல்லாமல் பதவியில் மட்டுமே இருப்பது நலம்.

அப்பொழுது தான்   மதிப்பு என்பது தானாக, அதிகாரத்தில் உள்ளவருக்கு வரும்.

பேச்சில் இனிமை எல்லாவற்றிலும் காட்ட வேண்டுமா??

ஆம். அதுவே அனைத்து பண்பு நலன்களை பெற்றுத் தரும்.

அனைத்து செயல்களிலும், நன்மை தனக்கும் அளித்து, பிறருக்கும் அளித்து,  வேலை செய்பவர்களும் தன்னைப் போன்று மனிதன் என்று மதிப்பளித்து பாரபட்சம் இல்லாமல் வாழ்ந்தால் தரத்திலும், பண்பிலும் ஏற்றம் மிகும்.

அன்புடன் ஜெ.கே

No comments: