Saturday, 30 June 2018

தினம் ஒரு மாற்றம் (29/06/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (29/06/2018)

உலகில் அனைத்தும் இறையாற்றலின் பரிசு தான்.

மனிதப் பிறவி என்பதும் அதுவே.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் தான் வாழ்க்கைப் பயணம்.

அந்தப் பயணத்தை இனிமையாக கடக்க அனைத்தையும் சாதிக்கவும் தெரிய வேண்டும். சவால்களை எதிர்கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும். நிறைய விஷயங்களை சகித்துக் கொள்ளவும் வேண்டும். சில விஷயங்களை தியாகம் செய்ய வேண்டும். சிலவற்றிற்கு விட்டுக் கொடுத்துப் பழகவும் வேண்டும்.

எல்லாமே இருந்தால் தான் குடும்பமும் சரி, வெளி உலகிலும் சரி சமாளிக்க முடியும்.

தன்னை ஒருவர் தனது தவற்றை உணர்ந்து தூய்மை செய்ய முனையும் போது, *தியானம்* பழகினால் மேலே கூறியவை அனைத்தும் சாத்தியமே. பழகாவிட்டால் நம் மன அலைச்சுழல், நம் மனது நம் கட்டுப்பாட்டில் ஒரு நேரம் போல் ஒரு நேரம் இருக்காது.

ஒருவரின் நிறைகுறைகள் அவரது பண்பிலேயே தெரியும். அனைவரும் இறைவனின் தன்மாற்றமே.

அனைவரும் அனைவரையும் கடவுளைப் போல் நினைக்க மனம் வராது. ஏனென்றால் பழக்கப்பதிவு. தான் என்கிற தன்முனைப்பும்  காரணம்.

மாற்றம் பிறரிடமிருந்து வராது. தன்னிடம் இருந்து தான் செயலாக்க  முடியும்.

தவறு செய்பவர்களை மன்னிக்கும் குணமும்
, மனவிரிவும் யாரிடம் இருக்கும்??  மனவிரிவும் பெருந்தன்மையும் உள்ளவர்களுக்கே சாத்தியம்.

குறள் எண் : 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.

குறள் விளக்கம்
மு.வ : யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

விட்டுக்கொடுத்தல் பல சிக்கல்களை தவிர்க்கும். அன்பே சிவம்.

அன்புடன் ஜெ.கே

No comments: