Tuesday, 19 June 2018

தினம் ஒரு மாற்றம் (18/06/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு  மாற்றம்* (18/06/2018)

தொலைக்காட்சியிலோ, அல்லது வானொலியிலோ அலைவரிசை இருக்கும். அந்தந்த அலைவரிசையில் அந்த சானல் ஒளி/ஒலிபரப்பாகும்.

மனம் என்பதும் அவ்வாறே.

நமது மனஅலைச்சுழல் விரைவு அமைதியாக வைத்திருக்கும் வரை, உணர்ச்சி நிலைக்கு செல்ல முடியாது.
ஆனால் மன அலைச்சுழல் விரைவு விநாடிக்கு 13 சுற்று அதிகமாகும் அல்லது தாண்டும் போது உணர்ச்சி மயமாகிறோம்.

உணர்ச்சி நிலையில் புலன் கவர்ச்சி, கோபம், கவலை, வார்த்தைகளின் பிரயோகம் எதுவும் தன்வயம் இழந்த நிலையிலேயே இருந்து செயல்படுவார்கள் ஒரு சிலர். கோபம் என்பது தனக்குத்  தானே இரத்தத்தில் விஷத்தை  ஊற்றிக் கொள்வது போல்.
தன்னையும் பாழாக்கி விடும். தன்னை சுற்றியுள்ளவருக்கும் மனம் புண்ணாகும். இது பல நோய்களை உருவாக்கும்.

மனத்தில் தேவையில்லாத விஷயங்களை அனுமதிக்க வேண்டாமே....

மனத்தில் எண்ணும் எண்ணங்கள் யாவுமே நல்ல எண்ணங்கள், தீய எண்ணங்கள் என்று தரம் பிரித்து வைத்து விடும்

எப்படியென்றால் வாங்கும் விலை உயர்ந்த பொருட்களுக்குக் கொடுக்கும் மதிப்பைப் போல,  ஒவ்வொருவரின் கருமையத்திலும் பிரித்து வைக்கப்படும்.

அந்த மன அலைச்சுழலில் தொடும் போது அந்த எண்ணம் எழுச்சி பெறும்..

அமைதியான மன அலைச்சுழலில்,
அனைவரையுமே சூழ்நிலை இருக்க வைப்பதில்லை தான்.. ஆனால் ஒருவரது மனத்தை அவரவர் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும்.

"எண்ணம்சீவ காந்தத்தில் எழுகின்ற அலைநிலை எண்ணமதன் நிலைபொருள் இறைவனுண்மை தேறுவோம்.
எண்ணமொடு சொல்செயல் இம்மூன்று அலைகளை இறுக்கியும் சுருக்கியும் இருப்புவைக்கும் காந்தமே.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
புத்தகம்: வாழ்க்கைவள உயர்வுப்படிகள் ஐந்து."
(பக்கம் 76)

அது தான் தியானமும், தற்சோதனையும்.
அனைத்தையும் நேசிக்கும் பண்பு இருந்தால் எதிலும் குறை காண முடியாது. நிறைவை மட்டுமே காண்பார்கள்.. அன்பு மட்டும் வளர்த்துக் கொண்டால் போதும்.

மன விரிவே பெருந்தன்மை குடிகொள்ளும்.

குறுகலான மனம்... விரிவடைவதற்கு தன்னுடைய அறிவினாலும், ஆற்றலினாலும், முயற்சியை மேற்கொள்ள வேண்டும்..

அனைவருக்குள்ளும் பாரபட்சம் இல்லாமல் இறைவன் அவரவருக்குள்ளேயும், வெளியேயும் இருப்பதை உணர்ந்தால் தானும், இவ்வுலகும் அமைதியடையும்.

மனநிறைவு கொள்ள மனத்தை பழக்கினால் போதும்.

அன்புடன் ஜெ.கே

No comments: