வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (06/06/2018)
*எப்பொருளை எச்செயலை எக்குணத்தை*
*எவ்வுயிரை எவரொருவர் அடிக்கடி நினைந்தால்*
*அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்*
*அறிவினிலும் உடலினிலும் மாற்றங்காணும்;*
*இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்.*
*எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்,*
*தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்*
*தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்."* - *வேதாத்திரி மகரிஷி.*
பலபேர் எதை மீண்டும் மீண்டும் நினைக்கிறார்களோ, அதுவே அவர்களுக்கு மீண்டும் மீண்டும் பிரபதிபலிக்கும்.
ஒருவர் எதைத் தூண்டி விட்டுக் கொள்கிறார்களோ அதன் தன்மையாய் இயல்பாக மாறும்.
விவேகானந்தர் / அப்துல்கலாம் / பெரிய மகான்கள்/ சினிமா நடிக நடிகையினர்/ குத்துச்சண்டை வீரர்கள்/ விளையாட்டு வீரர்கள்/ மனதுக்கு ஒவ்வாத காட்சிகள்/ புரட்சிக் கவிஞர்கள்/ குழந்தைகள்/ கார்ட்டூன் காட்சிகள்....
போன்று எந்த ஒன்றை மனதில் திரும்பத் திரும்ப நினைத்தால்.., அவ்வாறான சூழ்நிலை... அவரவர் மனதின் நினைப்பிலும், வீட்டிலேயும் உருவாகும் என்பது உளவியல் ரீதியான உண்மை.
நிஜத்தில் நடப்பதற்கும் நினைப்பில் நடப்பதற்கும் வேறுபாடு உள்ளது.
நினைப்பில் நடப்பது அவரவருக்கு மட்டுமே தெரியும். பிறருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
ஆனால் மனதிற்குள் எதை எந்த நினைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையும், அறிவும், மனிதனுக்குத் தெரியும்.
விழிப்புணர்வுடன் ஆக்கப்பூர்வமான சிந்தனையை மட்டுமே அனுமதித்தால் மன நலத்தோடும் உடல் நலத்தோடும் வாழ முடியும்.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment