வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (17/06/2018)
மனசுக்கு பிடித்தது எல்லாம் செய்யலாமா???
ஒருவருக்கு உணவு (Junk food), புகைபழக்கம், பேருந்தில் நடைபாதையில் நின்று பயணம் செல்வது,
மாற்றான் மனைவி, மாற்றான் கணவர் என்று தவறான மனதுக்குப் பிடித்த உறவுகளுடன் உறவு வைப்பது, வாய் ஓயாமல் பேசி அர்த்தமற்ற சொற்களால் அரட்டை அடிப்பது, விதம் விதமான கண்களைக் கவரும் தரமற்ற. கண்ணியம் இல்லாத உடை அணிவது, பிறர் கவனம் தன் பக்கம் இழுக்க வேண்டும் என்ற பிறர் மன தூண்டுதலின் பேரில் வியாபார மூளைச்சலவை செய்து பொருட்களை வாங்கச் செய்வது...எவ்வளவோ நாட்டு நடப்புகள், வன்முறைகள்.. எல்லாம் மனதுக்குப் பிடித்து செய்யும் விஷயங்கள் தனக்கும், குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் சீர்கேடுகளை விளைவிக்கும் இவை எல்லாம் எதற்கு?? சுயமாக சிந்தித்தே தெளிக!!! இவைகளை மனதிற்குள் அனுமதிக்கலாமா???
நன்றாக இருக்கும் ஒரு கணவன் மனைவி உறவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு தவறான உறவு தேவையா??
எதற்கு மனிதன் எல்லாவற்றிற்கும் பேராசைப்படுகிறான் தவறு என்று அறிந்தும்???
*விழிப்புணர்வு* வேண்டும் அனைத்திலும்.
தன்னை ஒருவர் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை , தன்னை தன் கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்றாலே அங்கே ஒழுக்கம் தவறுகிறது என்று பொருள்.
எதற்காக , உணவில், உடையில், பேச்சில், நடையில், செயல்முறைகளில், கற்பில் ஒழுக்கம் வேண்டும் என்று நமது முன்னோர்களும், மகான்களும், சித்தர்களும் வைத்தார்கள்??
தவறுகள் என்பது எண்ணத்திலேயே வேருடன் அழிப்பதற்கும். சிந்தையில் தூய்மையான எண்ணங்கள் மட்டுமே பயணிப்பதற்கும், அனைத்தையும் தெய்வமாக பார்க்கவும் தான்.
ஒருவரது பிறவித் தொடர் தொடரவும், நீங்கவும், இவையே காரணமாக உள்ளது.
*ஐந்தில் அளவு முறை.... உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இவை ஐந்திலும் அளவு அதிகமாகவோ, முறைமாறியோ, அலட்சியப்படுத்தியோ அனுபவித்தால்..... அவையே எல்லா சிக்கலுக்கும், நோய்க்கும், காரணமாகும். என்று நமது அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறியுள்ளார்கள்.*
அளவுமுறை எதிலும் அவசியம். அந்த விழிப்புணர்வையும், ஒழுக்கங்களையும், கற்றுத்தருகிறது மனவளக்கலை முழுமைநல நல்வாழ்விற்கான யோகக் கல்வி முறை.
அன்புடன் ஜெ.கே
No comments:
Post a Comment