Thursday, 7 June 2018

தினம் ஒரு மாற்றம் (07/06/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (07/06/2018)

"ஐந்து புலன்கள் மூலம் உயிரின் ஆற்றல் அழிவதையே இன்ப மென உணர் மயக்கம் சிந்தனையில் உயருங்கால் சீவ காந்தம் சிதறுவதே ஐயுணர் வென்றறிந்து கொண்டோம்.

உந்த உந்தக் குண்டலினி புருவ மையத் தூறிவரும் பேரறிவின் ஆற்றல் பெற்று சொந்தத்தனி முயற்சியினால் வாழ்வாராய்ந்து சொல், நினைவு, செயல், மூன்றை ஒழுங்கு செய்வோம்."
(ஞா.க)
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

உடலில் நோயை நாமே வரவழைத்துக் கொள்கிறோம் பல நேரங்களில்.

உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் ஐந்தில் அளவு முறை காக்க பஞ்சேந்திரிய தவம் உதவும்.

உண்ணும் முறை ஒரு பக்கம் என்றால் நாவிற்கும் கண்களுக்கும் அடிமையாகிப் போகிறோம்.

நிறைய உணவகங்களில் சுவையைக் கூட்டுவதற்காகவே சில ரசாயனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

அங்கே Junk food என்று அழைக்கப்படும் Noodles pizza Burger Packed snacks etc..
போன்றவை உடம்புக்கு ஒவ்வாது என்று அறிவு உணர்ந்த போதும் நாவின் சுவைக்கு அடிமையாகிப் போவதேனோ??

பஞ்சேந்திரிய தவத்தில் அருட்தந்தை அவர்கள் புலனை கையாளக் கற்றுக் கொடுக்கிறார்கள்.
புலன்கள் நமது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதற்கு இந்த தவம் உதவுகிறது.

உடலும் மனமும் நம் வசம், நம் சொல், பேச்சு, கேட்டு நடந்தால் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை வாழ்கிறோம் என்று பொருள்.

கேட்கவில்லை என்றால் நம் உடல் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்று பொருள்.

விழிப்புணர்வு இங்கு தான் தேவை. மனம் உடலின் தேவை அறிந்து, அதன் மொழி உணர்ந்து, செயல்பட்டாலே போதும்.

அன்புடன் ஜெ.கே

No comments: