Wednesday, 27 June 2018

தினம் ஒரு மாற்றம். (20/06/2018)

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்* (20/06/2018)

ஒரு சாலையை நடந்து கடக்கும் போது இரண்டு பக்கமும் திரும்பிப் பார்க்கிறோம்...
ஏன்?? தன்னுடைய குறுக்கீட்டினால் பிறருக்கும், தனக்கும், பாதிப்பு வராமல் இருக்கவும், தனது உயிரை.. *தான்* மட்டுமே பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள முடியும் என்பதும் தான் காரணம்.

இந்த இரண்டு விஷயங்களை யார் யோசிக்கிறார்களோ, அவர்களால் பெரும்பாலும் பிறருக்கும் தனக்கும் நன்மையே விளையும்.. இது விழிப்புணர்வினால் வரும் சிந்தனை தான்.

இப்படி எல்லாவற்றிலும்.. சுய பாதுகாப்பும், சுய சிந்தனையும், இருந்தால் எப்பொழுதும் சமுதாய நலன் நல்லபடியே இருக்கும்.

*"அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம் நீளாயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க!"*

இதை தன் வாழ்த்து என்று கூறுவார்கள். ஒவ்வொருவரும் தவத்தின் நிறைவில் முதல் சங்கல்பமாக தன்னையே மனக்கண் முன் கொண்டு வந்து சுய சங்கல்பம் செய்யும் பொழுது, தனது உடல், உயிர், மனவளம், நிறைவு எல்லாமே  அடங்கி விடுகிறது.

ஏன் *ஓங்கி* வாழ்க என்று சொற்களை இங்கு பயன்படுத்தி இருக்கிறார்கள் மகரிஷி அவர்கள்??

எல்லாமே மனிதனுக்குள்  இறைவனே அடக்கமாக இருப்புநிலையாக, அறிவாற்றலாக உள்ளார் என்பதும், ஒன்றை கேட்டுத் தான்ப் பெற வேண்டும் என்பதில்லை என்பதும் தான் பொருள். தானாகவே இயல்பாகவே இருப்பதை ஊக்குவித்தால் போதும்.. அதுவே  ஓங்கி வாழ உள்ளுணர்வே அளிக்கும் என்று பொருள்..

ஆகவே தான் இந்த *தன் வாழ்த்து* என்பதை சொற்களின் பயன்பாட்டை கூட்டவோ, குறைக்கவோ, வேண்டாம் என்றும் கூறுகிறார்கள்.

ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் ஒவ்வொரு அதிர்வு உண்டு.  அதற்கு நமது
*வாழ்க வளமுடன்*   என்ற வாழ்த்து மட்டுமே போதும்.

தமிழ் மொழியின் அதிஅற்புதமே இதன் அக்ஷரங்களின் அதிர்வலையும் அதன் ஊடுருவும் தன்மையும் தான்.

எப்பொழுதும் பயன்படுத்தும்... ஒவ்வொரு சொற்களுக்கும் அதிர்வலை உண்டு.

அதை நேர்மறையாகவும், இனிமையானதாகவும் சொற்களை பயன்படுத்தினால், அனைவருக்கும் நலம் விளைவிக்கும். *வாழ்க வளமுடன்* மந்திரச் சொல்லுக்கும் அதே போல் அலைஅதிர்வு அதிகம்.

அதை உணர்ந்து அனைத்தையும், அனைவரையும் வாழ்த்தி ஒற்றுமையுடன் நல்லிணக்கத்துடன் வாழ்வோம்.

அன்புடன் ஜெ.கே

No comments: