வாழ்க வையகம் !
வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன் !!
தினம் ஒரு மாற்றம் (04/03/2019)
ஒருவருக்கு சில விஷயங்கள் பிடித்ததாக இருக்கும். சாம்பார் பிடிக்கும் , கூட்டு பொரியல், ரசம் பிடிக்கும், மோர் இப்படி வகை வகையாகப் பிடிக்கும். ஆனால் ஒரே நேரத்தில் சோற்றில் அனைத்தையும் கலந்து சாப்பிட மாட்டார்கள். ஏன் என்றால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி ருசி, தனி சுவை..
சாம்பார் மட்டும் போட்டு சாப்பிடும் இடத்தில் சாம்பார் ரசம் ... இரண்டையும் போட்டு யாரும் உண்பது கிடையாது. ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தது..
அதன் சுவையும் தனித் தனியாக சோற்றில் போட்டு உண்ணும் போது அதன் சுவையை முழுமையாக அனுபவிக்க முடியும்.
ஆன்மீக சிந்தனை என்பது பக்தியுடன் விளக்கமும் சேர்ந்த தெளிவான அறிவு..
வெறும் நம்பிக்கை மட்டும் அல்ல ஞானம்.. நம்பிக்கையை உணர்ந்த அறிவு. மெய்ப்பொருள் உணர்தல். உண்மை என்றுமே நிலைப்புத் தன்மையானது. அது உண்மையின் உணர்வை உள்ளுணரும் போதே கிட்டும்.
அறிவு என்பது ஞானத்தை நோக்கியப் பயணம் .. முழுமையை உணர்வது. முக்தி பெறுவது.
அதை தன்னுள் ஊடுருவ விட்டால் மட்டுமே அதன் சுவை உணர முடியும். அனுபவிக்க முடியும்.
இதில் மனநிறைவும் மனநிம்மதியும் காண முடியும். தன்னை அறிதலும், உணர்தலும் தனது தனித்துவமும் புரிய வரும். அது மனதளவில் விரியும்.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment