Thursday, 28 March 2019

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

வாழ்க வளமுடன்

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

பாகம் : 18

அருட்தந்தை அவர்களின் தனிச்சிறப்பு.

அருட்தந்தை அவர்கள் தான், மனித குல வரலாற்றில், ஆன்மீக அறிஞர்களும், விஞ்ஞானிகளும் அறிந்திடாத பரமாணு (இறைத்துகள்) / உயிர்த்துகள் இதனைப் பற்றி உணர்ந்து உலக மக்களுக்கு அறிவித்தார்கள் என்ற உண்மையைக் கீழ்க்காணும் பாடலில் அருட்தந்தை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இறைநிலைத் தன்னிறுக்கத்தால் எழுந்த பொருள் விண்ணென்று

இரு துறைகளின் அறிஞர் விஞ்ஞானி தத்துவத்தார் உணர்ந்தார் சொன்னார்

இறைநிலைக்கும் விண்ணிலைக்கும் இடையில் உள்ள தத்துவம் தான்

பரமாணு, நுண்விண் இவ்விரண்டு மேலாம்

துறைகளிலும் ஆழ்ந்தவர்கள் ஆராய்வில் நழுவ விட்டார் இத்துகள்கள்

தொடர்ந்தழுத்தி உருவான தொகுப்பேதான் விண்ணாகும்

சிறைப்பட்ட இத்துகள்கள் விண்ணிலிருந் தோடுவதே காந்தமென்ற அனைத்தலைகள்

சிறப்புடைய தன்மாத்திரைகளாய் முடிவில் பரமாகும் ஆதியந்தம்

( ஞானக்களஞ்சியம் பாடல் 1709)

எனவே, மனித குல வரலாற்றில் பரமாணு அல்லது உயிர்த்துகளைப் பற்றித் தமது ஆழ்ந்த தவத்தில் உணர்ந்து, உலக மக்களுக்கு ஒரு மாபெரும் பரிசாக வழங்கிய நமது அருளாசான் அவர்களின் மேன்மையையும், பெருமையையும் உணர்ந்து போற்றுவோம். இதனை உணர்ந்து கொள்வதால் மனித சமுதாயம் அடையக் கூடிய மகத்தான நன்மைகள் பற்றிய அருட்தந்தை அவர்களின் விளக்கங்களைப் பற்றிப் பின்னர் அளிக்கிறேன்.

இத்தகைய தலைசிறந்த மகானை நாம் குருவாக அடைவதற்கு அருள்புரிந்த இறையாற்றலுக்கு நன்றி கூறுவோம். அவர்களுடைய மாணவர்கள் என்பதை எண்ணி எண்ணி பூரிப்படைவோம்.

அருட்தந்தை அவர்கள் தனது 95-வது வயதில் 2005 ஆண்டு பேராசிரியர்களுக்கு என நடத்திய ஒரு வார சிறப்புத் திறனூக்கப் பயிற்சியும் கேட்டுக் கொண்ட படியே, உலக மக்களுக்கு இந்தத் தத்துவத்தை உணர்த்தி, நாமும் உய்வோம். உலக மக்கள் உய்வதற்கு உதவி செய்வோம்.

தொடரும்....

No comments: