வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (23/01/2019)
*பஞ்ச பூதத்தில் நெருப்பு*. இதை அக்னி தீ கங்கு என்றும் குறிப்பிடுவர்.
அழுத்தக் காற்றே நெருப்பாக, இருப்பாக உள்ளது. இரண்டு கல்லை உரசினால் நெருப்பு வரும். இரண்டு கையையும் தேய்த்தாலும் வெப்பம் வரும்.
உடலின் உள்ளே பொதுவாக வெப்ப ஓட்டமாக இருக்கிறது. அதன் வெப்பநிலை 37டிகிரி செல்சியஸ். 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டாக உள்ளது. வெப்பஓட்டம் சீராக இயங்க வேண்டும்.
நெருப்பு ( தீ ) மதிப்பது எதற்காக?? தீபம் ஏற்றுவதும் தனக்குள் குண்டலினி சக்தியை ஏற்றுவதும் உயர்வுக்கான வழிகள்.
தீபம் என்பதும் வெளிச்சத்தை கொடுப்பது மட்டுமல்ல.. இருளை நீக்குவதும் அதன் தன்மை. நேர்மறை சக்திகளை ஈர்ப்பதும், எதிர்மறை சக்தியை விரட்டவும் செய்யும். இருட்டு என்பது இருப்பு ஆகும். அதன் தன்மை வெளிச்சத்தால் இருள் இல்லை என்று பொருள் அல்ல. முன்னேற்றத்தைக் கொடுக்கக் கூடியது தீபம் என்பதால் அதிகாலையிலும் மாலையிலும் விளக்கேற்றி அக்னியை வணங்குகிறார்கள். இதில் சூரிய சக்தியை காலையிலும் சந்திரனின் சக்தியை மாலையிலும் பெறுவதற்காகவும் வழிபாடு என்பது ஏற்பட்டது. விஷப்பூச்சிகள் மிருகங்களிடம் பாதுகாப்பு கருதி அக்னியை தீபமாக ஏற்றினர்.
உட்கருத்து என்பது மதித்தால் அது நமக்கு ஒத்தும் உதவியுமாக இருக்கும் என்பதே. அக்னியை சாட்சியாக வைத்து திருமணத்தில் வலம் வருவதும் வாழ்நாள் முழுவதும் இன்ப துன்பங்களில் ஒருவருக்கு ஒருவர் துணையாக ஆயுள் வரை இருப்பேன் என்பதும் ஆகும்.
அக்னி (தீபம்) என்றும் மேல் நோக்கியே எரியும். அலைபாயவிட்டால் அணைந்து விடும் அபாயமும் உண்டு. அது ஒருவருக்கான முன்னேற்றத்தை குறிக்கும். ஆகவே வாழ்க்கையை ஒரே சீராக மனதை அலைபாயவிடாமல் கொண்டு செல்லவே அக்னியை வணங்கவும், மதிக்கவும் வேண்டும்.
சிகரெட் என்ற பேரிலும் நெருப்பை பற்ற வைத்து உடலை பாழ்படுத்துவது, அதே அக்னியை தரையில் போட்டு மிதிப்பது. பல உயிர் அழிய தீயை பற்ற வைத்து காட்டுத் தீயாக பரவ விடுவது..
கந்துவட்டி என்றும், அதிக வட்டிக்கு பணம் கொடுப்பதும். பிறரின் வயிறு எரிவது... மறைமுகமான வருத்த அலைகளாக சாபமாக மாறும் என்பதை யாரேனும் அறிவார்களா??? Fire.. துப்பாக்கி சூட்டினால் இறப்பு.. இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். வெப்பத்தினால் உஷ்ணம் சம்பந்தமான நோயினால் பாதிப்பு. வெப்பம் அதிகமாகி வறட்சி ஏற்பட்டு சோமாலியா நாட்டில் அனைத்துக்கும் பஞ்சம் ஏற்படுவதும் அவர்கள் முன்னாளில் செய்த வினையின் விளைவுகளே ஆகும்.
செயல் விளைவு இதனால் ஆங்காங்கே தீப் பற்றுவதும், பகையை , சம்பாதிப்பதும் நெருப்பை வெறுப்பாய் பலரிடம் காட்டுவதால் தான்.
தனக்குள்ளே தற்சோதனை செய்து வாழ கர்மவினையை தீர்க்க முடியும்.
அனைவரும் நலமாக வாழ நெருப்பை நேர்மறையாக, ஆக்கத்திற்கு (வெளிச்சமாக) மட்டுமே பயன்படுத்த நலமே விளையும்.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment