Tuesday, 26 March 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(25/03/2019)*

கேட்புத் திறன் அதிகமாகும் போது தான் இறைவனின் கருணையான குரலையும் கேட்க முடியும்.

தான் மட்டுமே பேசிக்கொண்டிருந்தால்.. யார் சொல்வதையும் யாரும் காது கொடுத்து கேட்கவும் மாட்டார்கள்... தான் சொல்வதை மட்டுமே பிறர் கேட்க வேண்டும் என்று தனது பேச்சுக்கு மட்டுமே முக்கியத்துவத்தை கொடுப்பார்கள்.  இதனால் குடும்ப உறவுகளுக்குள் பிணைப்பு வருவற்கு கால தாமதமாகும்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையில், பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையில், தாத்தா பாட்டி பேரன் பேத்திகளுக்கு இடையில், சகோதர சகோதரிகளுக்கு இடையில்,  இவ்வாறான கேட்புத்திறன் இன்று அதிகரிக்க வேண்டும். Listening ..கேட்பதும் அவர்கள் சொல்வதை கவனித்து அதற்குத் தகுந்த பெரியவர்களை ஆலோசனைகளைக் கூறுவதும் இன்று அரிதாகிவிட்டது. அதை மீண்டும் கூட்டுக்குடும்பத்தில் ஏற்படுத்த வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்..

பிள்ளைகள் இன்று பெற்றோரிடம் தந்தை அல்லது தாயிடம் மட்டுமே வளரும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவது அவசியமில்லாத ஒன்று..

பெரிவர்களின் கண்காணிப்பில் தனிக்குடித்தனம் என்பது பாதுகாப்பாகும்... மற்றபடி பாதுகாப்பு அற்றதாகவே கருதப்படுகிறது. பெரியவர்களின் வழிகாட்டல் தேவையாக உள்ளது. இங்கே தான் தனிமை விரட்டியடிக்கப்படும். கூட்டுக்குடும்பத்தில் குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இன்றைய வன்முறைகளும் குறையும்.

சூழ்நிலை தளர்வாக/ இறுக்கமில்லாததாக இருக்கும் போது அமைதி அங்கே இருக்கும். இறுக்கமாக இருக்க ஒருபோதும் விடாமல் பார்த்துக் கொள்ள விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, தியாகம் குடும்ப உறவுகள் அனைவரிடமும் வேண்டும். அப்பொழுது மட்டுமே குடும்ப அமைதி இருக்கும்.

அன்புடன் ஜே.கே

No comments: