Friday, 29 March 2019

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

வாழ்க வளமுடன்

அருட்தந்தையோடு அருளானந்தனின் அனுபவங்கள்

பாகம் : 19

மனிதப் பிறவியின் நோக்கம்:

நமது உடலில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மூலம் ( Origin) இறைவெளி (தெய்வம்) என்பதை உணர்வதோடு மட்டுமின்றி, சென்ற பகுதியில் அளிக்கப்பட்டிருந்த பாடலின் கடைசி வரியில் குறிப்பிட்டுள்ளபடி, அந்தமும் (முடிவும்) இறைவெளியாக இருக்க வேண்டும்" என்றப் பேரறிவின் திட்டத்தை அல்லது இயற்கை நியதியை உணர்ந்து, நமது ஆன்மாவில் உள்ள களங்களைப் போக்கி, தூய்மை செய்து மீண்டும் இறைவெளியோடு இணைந்து 'முக்தி' பெறவேண்டும் என்பதுதான் என்பதை நமது அருளாசான் அவர்களும் பிற ஞானிகளும் உணர்ந்து கூறியிருக்கிறார்கள்.

துரியாதீத தவத்தை முறைப்படி தொடர்ந்து செய்வதன் மூலமும், அறநெறி வாழ்க்கை வாழ்வதன் மூலமும் தான் இந்த சாதனையை அடையமுடியும் என்பதை நமது அருட்தந்தை அவர்களும், திருமூலர் போன்ற ஞானிகளும் தமது அனுபவத்தைக் கொண்டே கூறியிருக்கிறார்கள்.

எனவே, மனித வழ்வின் தலைசிறந்த சாதனையாகிய முழுமைப்பேறு பெறுவதற்கு ஏதுவாக நமது ஆன்மாவைத், தூய்மை செய்வதற்கு துரியாதீத தவம் இன்றியமையாதது என்பதை உணர்ந்து கொள்வோம்.

அருட்தந்தை அவர்கள் வழங்கியுள்ள உயிர்த்துகளைப் பற்றிய விளக்கம்.

உடலமைப்பைப் ( physical structure) பற்றி முற்கால சித்தர்கள் முதல் தற்கால மருத்துவ விஞ்ஞானிகள் வரை ஆராய்ச்சி செய்து மனித குலத்திற்குப் பயனுள்ள விவரங்கள் அளித்துள்ளார்கள். ஆனால், நமது உடல் அமைவதற்கும், இயங்குவதற்கும் இன்றியமையாத சதனமாகிய உயிரமைப்பைப் பற்றி, எனக்குத் தெரிந்தவரை நமது அருளாசான் அருட்தந்தை அவர்கள் தான் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான விளக்கங்களை வழங்கியுள்ளார்கள்.

தொடரும்....

No comments: