*வாழ்க வையகம்!
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
*தினம் ஒரு மாற்றம்*
*(23/03/2019)*
தன் கையே தனக்குதவி.. எப்பொழுதும் உணவாகட்டும், உழைப்பாகட்டும், பணமாகட்டும்.. தன் கையால் புசித்து சாப்பிடுவதும், பொருளை ஈட்டுவதும், தன்னுடைய முழு ஈடுபாட்டில்.. சுய உழைப்பாக இருக்க வேண்டும். பணமும் அந்த உழைப்பில் வந்ததாக இருக்க வேண்டும். உழைக்க இயலாதவர்களுக்கு கொடுக்கும் தர்ம சிந்தனையும் இயல்பாக ஒருவரிடம் இருக்கும்.
பிறரை ஏமாற்றியோ, வருத்தப்படுத்தியோ, பிடுங்கி வாங்குவதோ, பிறர் வாழ்க்கை சுதந்திரத்தில் கை வைப்பதோ கூடாது.
பிறர் பொருளுக்கும், பணத்திற்கும், நபருக்கும் என்றும் ஆசைவைப்பது கூடாது. தனக்கென்று இறைநிலையால் கொடுக்கப்பட்டதில் நிறைவு கொள்ளவும், தனது சுய உழைப்பில் கிடைத்ததில் மகிழ்ச்சியாக வாழ்வதும் மட்டும் நிலைக்கும்.
பால்காரன் ஒருவன் பால் தண்ணீர் கலக்காமல் விற்று வந்தான்.. காசு சேர சேர ஆசை வந்து..பாலில் தண்ணீர் பாதிக்குப் பாதி கலந்து விற்கலானான். பாலுக்கு பணத்தை அனைவர் வீட்டிலும் பெற்றுக் கொண்டு ஒரு ஆற்றங்கரை மரத்தடியில் சற்று இளைப்பாறும் போது உறங்கிவிட்டான். அம்மரத்தில் இருந்த குரங்கு அவன் மடியில் இருந்த காசை எடுத்துக் கொண்டு எல்லா பணத்தையும்... தண்ணீரிலும்... தரையிலுமாக வீசிக் கொண்டிருந்ததை பார்த்து அவன் பணத்தை எடுக்கலானான். குரங்கிடம் பணப்பையை திருப்பி வாங்கினான்.. அதில் தரையில் வீசிய பணம் அவனது நேர்மைக்குக் கிடைத்ததாகவும்.. நேர்மையற்று வித்த பணம் ஆற்று நீருடன் போய்விட்டதைக் கண்டு... மனம் திருந்தி பின்னாளில் நீர் கலப்பதையே விட்டுவிட்டான்.
இது தான் செயலுக்கான விளைவாகும். உண்மையாக உள்ளது நிலைக்கும். பேராசை பெருநஷ்டம். அடுத்தவர் உழைப்பால் வந்த பணத்தை சுலபமாக ஏமாற்றி அதில் குளிர் காய நினைத்தால் கடவுள் என்பவர் அதற்கான ஊதியத்தை விளைவாக துல்லியமாகக் கொடுப்பார்.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment