வாழ்க வளமுடன்
அருட்தந்தையோடு அருளனந்தனின் அனுபவங்கள்
பாகம் : 14
அருட்தந்தை அவர்கள். ஒரு நாள் துரியாதீத தவம் நடத்தும் போது எனது உள்ளத்தைத் தொட்ட ஒரு நிகழ்ச்சி.
திருவான்மியூர் தலைமையகத்தில், ஒருநாள், அருட்தந்தை அவர்கள் துரியாதீத தவத்தை நடத்திய போது, ஏற்கனவே தீட்சைப் பெற்ற சில அன்பர்களையும் சேர்த்து சுமார் நூறு அன்பர்கள் துரியாதீத தீட்சை அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சி திருவான்மியூர் தலைமையகத்தின் முதல் மாடியில் நடைப்பெற்றது.
அருட்தந்தை அவர்களுக்கு உதவியாக, அன்பர்களுக்கு ஒவ்வொரு தவ நிலையிலும் தவ ஆற்றலைக் கூட்டிக் கொடுக்கும் சேவை செய்ய ஏதுவாக சுமார் பத்து ஆசிரியர்கள் தயாராக இருந்தோம். தவ விளக்கம் நிறைவு பெற்ற பிறகு, ஆக்கினைத் தவம் தொடங்கும் போது, அருட்தந்தை அவர்கள் மேடையிலிருந்து கீழே இறங்கி, மின் விளக்குகளை (இரண்டைத் தவிர, மீதியுள்ளவற்றை) அவர்களே அணைத்தார்கள்.
ஆக்கினைத் தவம் செய்த அன்பர்களுக்குப் புருவ மையத்தில் தவ ஆற்றலைக் கூட்டி உதவுவதற்காக நானும் பிற ஆசிரியர்களும் தயாராக இருந்த போது, எங்களில் யாரையாவது ஒருவரிடம் மின்விளக்கை அணைக்குமாறு அருட்தந்தை அவர்கள் கூறியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவரே அணைத்த நிகழ்ச்சி, எனக்கும் பிற ஆசிரியர்களுக்கும் உள்ளத்தைத் தொடும் வகையில் அமைந்தது
"Don't command, Don't comment, Dont Demand" என்ற அறிவுரைகளைப் தாமே பின்பற்றி நடந்து, எங்களுக்கு ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்ததாக அனைத்து ஆசிரியர்களும் உணர்ந்தோம்.
தொடரும்....
No comments:
Post a Comment