*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
*தினம் ஒரு மாற்றம்*
*(28/03/2019)*
மனவளக்கலையை அளித்த மகானுக்கு நன்றியுணர்வுடன் எந்நாளும் அன்பாக நமது கடமையை தொண்டாக முழுமனதுடன் நிறைவேற்ற பாக்கியம் செய்திருக்கிறோம்.
அனைத்தையும் தெய்வமாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்த பல மகான்கள், சித்தர்களில் நமது மகானும் ஒருவராவார்.
ஆனால் *அருட்தந்தை அவர்களின் சிறப்பம்சமே அனைத்தையும் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எளிமைபடுத்தியது தான்.*
காந்தத்தின் மூலம் எதை ஈர்க்க வேண்டும் எதை விலக்க வேண்டும் என்ற தெளிவை அனவருக்குள்ளும் ஏற்படுத்தியவர்கள்.
ஒரு பிடி உணவில் உலக ஒற்றுமையை உணர்த்தியவர்கள் நம் மகான்.
அனைத்திலும் இருப்பாற்றலாக இருக்கும் தெய்வீகத்தை அனைவருக்குள்ளும் பரவச் செய்ய *வாழ்க வளமுடன்* மந்திரச் சொல் பலன்களை அலையியக்கத் தத்துவத்தில் விளக்கியவர்கள்.
வருங்கால அறிவியலை அறவாழ்கையாக வாழ வழிகாட்டும் நம் மகான் இரண்டொழுக்கப் பண்பாட்டை பின்பற்றினாலே மனமாற்றம் ஒருவருக்குள் இயல்பாக வந்துவிடும் என்று நிரூபித்துக் காட்டியவர்கள்.
இறையுணர்வு வாழ்க்கையில் கடைபிடித்திட மனமது செம்மையாகும் தனிமனித அமைதியை உலகெல்லாம் பரவச் செய்திட உடல், உயிர், மனமது பயிற்சிகளை பழக்கச் செய்தவர்கள்.
எண்ணங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளவும், ஆராயவும், ஆசையை சீரமைக்கவும், சினத்தை தவிர்க்கவும், கவலையை ஒழிக்கவும், தன்னை அறிய தன்னை உணர 'நான் யார்'? பயிற்சி முறையை கொடுத்து விளங்க வைத்தவர்கள்.
*ஒழுக்கத்தால் உலகினையே நட்பு கொள்ளும் அன்புநெறி விளங்க வைத்தவர்கள்.*
நம் மகான் உலகத்தில் அற்புதங்களை மனித குலத்தை *மனவளக்கலை* மூலம் அமைதி பெறும் வழிகளை சாதனைகளாக்கித் தந்து கொண்டிருக்கிறார்கள்.
குருவே சரணம்🙏
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment