Tuesday, 12 March 2019

தினம் ஒரு மாற்றம்

வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!

*தினம் ஒரு மாற்றம்*  (20/01/2019)

பஞ்சபூதங்களில் நிலம் ..மண்.. இவற்றை எவ்வாறு மதிக்கிறார் ஒருவர்??

மண் இந்த உடலில் சதையாக எலும்பாக இருப்பது. ஆக எவராயினும் அவரை மதிப்பது பூமியை மதிப்பதற்கு சமம். மனிதன் மனதில் ஈரம் இருக்க நீரை  பருகுவது. பசி, தாகம் என்று வருபவர்களுக்கும் மனதோடு உணவு, நீரை வழங்குதல் மண்ணுக்கு செய்யும் மரியாதை. மண்ணை வறண்டு போகாமல் நீர் ஊற்றி செடிகளை வளர்ப்பது.. மண் வளத்தை ரசாயனம் போட்டு அதை சேதப்படுத்தாமல் இயற்கையாகப் பேணுவது, மண்ணை பயனுள்ள முறையில் பயன்படுத்துவது. மண்ணை தொட்டு வணங்குவது.. வீட்டுப் பெரியவர்களை மதித்து வணங்குவது. மண்ணை பாதுகாப்பதற்குச் சமம்.

மண்ணை மதிக்காமல் வாழ்வதினால்  என்ன ஆகிறது? செயல் விளைவைக் காண்க.

மண்ணை   சுரண்டித்  திருடுவது, தனது வீட்டிற்கு சிறிதளவு மண் வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டில் யாரையுமே கேட்காமல் எடுப்பது.. காலால் எந்த பொருளையும், நபரையும் மிதிப்பதும் அவமதிப்பதும், தனக்குத் தேவைக்குப் போகவும் மேலே மேலே நிலம் என்கிற சொத்தை அபகரிப்பது அதிகம் சேர்ப்பது..பூமிக்கடியில் தவறான சிலவற்றை பதுக்குவது.. பெரியவர்களை விருந்தினர்களை அவமதிப்பது,...வாடகை என்கிற பேரில் பணத்தை அதிகம் பெறுவது,

மண்ணுக்கு அடியில் பாம் (Bomb) வைப்பது. சரீரப் பசிக்காக பலரை இம்சிப்பது.. பாலியல் வன்கொடுமை மட்டுமல்ல... பெண்களை காணத் தகாத காட்சிகளில் படம்பிடிப்பது மட்டுமல்ல அதை பகிரங்கப்படுத்துவதும்,  ஒருவர் நன்றாக இருக்கக் கூடாது என்பதற்காக சிலவற்றை செய்வது... பிறரின் வயிற்றெச்சலை, வருத்தங்களை  வாங்குவது.... இவைகள் தான் பல விபத்துக்கள்,  வண்டியில் Skid ஆகி விழுவது, கால் தரையில் வழுக்கி விழுவது.. பல உயிரிழப்புகளுக்கும் காரணம். அனைத்தும் செயலுக்கான விளைவுகள் என்பது புரியும்.

சடப்பொருட்கள்,  உயிரினங்கள், மற்றும் மனிதர்கள் வரை இந்த பூமியில் தான் வாழ்கிறோம். மண்ணில் போகும் இந்த உடலுக்கு வாழும் நாட்களில் உடலுக்கான நற்பெயரை விட்டுச் செல்லலாமே!!

நல்லவர் கெட்டவர் என்று பாரபட்சமில்லாமல் அனைத்தையும், கழிவுகளையும் சகித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டு பூமி இருப்பது எதனால் என்றால்.. உலகில் சிலர் பூமியை மதிப்பதால் மட்டுமே..

பூமி குளிர மரம் நடுவது மட்டுமல்ல வறட்சி ஏற்படாமல், பறவைகள் விலங்கினம் மனிதர்களுக்கு இரக்கம் காட்டுவதும், தக்க தருணத்தில் உதவுவதும், பெண்களை  மதிப்பதும்,   பூமிக்கு மட்டுமல்ல, மனிதர்களின் மனதிலும்  ஈரம் வாழும்.

அன்புடன் ஜே.கே

No comments: