வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!!
*தினம் ஒரு மாற்றம்* (21/01/2019)
*பஞ்சபூதத்தில் நீர் :* மதிப்பதால் என்னாகிறது? மதிக்காவிட்டால் என்னாகிறது? நீர் உடலில் ரத்த ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்ககிறது. தாய்ப்பாலாக நீராக தனது ரத்தத்தையே உணவாக குழந்தைக்கு அளிக்கிறாள். இரத்தம் உடலில் கெடாமல் சீராக ஓடுவதற்கு, உணவை உடல் ஏற்றுக் கொள்ளும் வகையிலே, உணவில் கவனம் செலுத்தி சாத்வீக முறையில் உமிழ்நீரை சுரந்து மென்று உண்ண, ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இயங்க உதவும். ரத்த செல்களை பாதுகாக்கும் முறையில் உணவை சத்துள்ள வகையில் உட்கொள்வது அவசியம். நீர் என்பது விலைமதிப்பற்ற கண்ணீராகவும், , வியர்வையாகவும், சிறுநீராகவும் சுரக்கிறது. கழிவாகவும் வெளியேறுகிறது.
இனி செயல் விளைவைக் காணலாம்.
நீர் எப்படி சிக்கனமாகவும், அதே சமயம் தாகத்துடன் தண்ணீர் கேட்பவருக்கு அவர்கள் கேட்பதற்கு முன்னேயே கொடுப்பது என்றும் நம் வீட்டில் தண்ணீருக்கான பஞ்சம் இருக்கவே இருக்காது. வேப்ப மரம், பனை மரம், புங்கன், ஆல மரம்... இப்படி நீரை பூமியில் சேமிக்கும் மரங்களை பயனுள்ள முறையிலே நீரை செடிகளுக்கும் ஊற்றி வளர்ப்பதும், ஒருவர் வீட்டில் கிணற்று நீர் இருந்தால் இல்லாதவர்கள் கேட்டால் அவர்களுக்கு ஆபத்து காலத்தில் அளித்து உதவுவதும் நீரையும், மனிதர்களையும், மதிப்பதற்கு சமம்.
நீர் அவசியமில்லாத வகையில் எப்படி பயன்படுத்துகிறார்கள்.. ?
குடிநீரை குடியாக, மதுபானமாக, உருவாக்கி பிறர் குடியை கெடுப்பது... ஊரே வெள்ளக்காடாக இயற்கை சீற்றமாக மாறுவது.. உண்மையில் இயற்கை சீற்றம் என்பது எதுவும் இல்லை. மனிதனின் மாசுபட்ட செயல்களால் பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தில் தங்கி வெள்ள நீரை போக விடாமல் வெள்ளக் காடாக மாற்றுவது மனிதனின் செயலுக்கான விளைவு ஆகும்.
Wash Basin, Shower bath, இப்படி நீரை திறந்து விட்டு பல் தேய்ப்பது.. பிறருக்கு துன்பம் விளைவிக்கும் செயல்களை செய்வது. அளவுக்கதிகமாக நீரை செலவழிப்பது.. பின்னாளில் விளைவை சந்திக்க நேரிடலாம். நீரை சேமிக்கவும், கவனமாக பயன்படுத்துவதும், நன்மை பயக்கும். இங்கே கூறியிருக்கும் விஷயங்கள் சிறிதளவே.. இதைப் போல் பலர் நீரை பல வகையில் தவறாக பயன்படுத்தினால் அவர்களுக்கு விளைவு காத்திருக்கிறது என்று பொருள். பயனறிந்து புனித நீரை அளவோடும், மதிப்போடும் அனுபவிப்பது நல்லது.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment