Thursday, 7 March 2019

அருட்தந்தை கேள்வி பதில்

அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்

❓ கேள்வி: ஐயா, கருவில் விண் எனும் உயிர்ச்சக்தி எவ்வாறு ஊடுருவுகிறது?

✅ பதில்: தத்துவத்தில் காந்த சக்திக்கு “வெள்ளம்” என்று ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள். “வெள்” என்றால் தூய்மையானது. “அம்” என்றால்    ”பிரணவம்” சிவமும் சக்தியும் சேர்ந்ததையே “பிரணவம்” என்று சொல்வது. அது தூய்மையானது. உதாரணமாக முட்டைக்குள் சுற்றிலும் வெள்ளைக் கரு இருக்கிறது. மையத்தில் மஞ்சள் கரு இருக்கிறது. முட்டையை உடைத்து அதற்குள் எங்கு பார்த்தாலும் ஒரு இறகு, ஒரு உயிர் இருக்கிறதா? என்றால் இல்லை. ஒரு எலும்பாகிலும் இருக்கிறதா என்று தேடிப் பாருங்கள். எதுவும் இல்லை. ஆனால் அது குஞ்சாகிக் கொண்டு வரும்போது இந்த இறகு, உயிர் எலும்பு எதுவும் முட்டை ஓட்டிற்குள் நுழையாது. ஆனால் சிறிது காலத்தில் அதன் மூக்கு, இறகு, கால், மயிர் எல்லாம் உற்பத்தி ஆகி வருகிறதல்லவா? அதாவது திரவமாக இருப்பதே அந்தந்த உறுப்பாகிறது. ஆனால் அதில் அடங்கியிருக்கக்கூடிய ஜீவகாந்த அலையில் அந்த கோழி உருவாவதற்கான அனைத்து தன்மைகளுக்கான Blue Print இருக்கிறது. அந்த ஜீவகாந்த அலை அந்தந்த வளர்ச்சிக்குத் தக்கவாறு உருவத்தைக் கொடுக்கிறது. இவ்வாறு உயிரின் அலையான, காந்தமே கருவில் ஊடுருவி பதிவை வெளிப்படுத்துகிறது.

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

No comments: