Friday, 29 March 2019

தினம் ஒரு மாற்றம்

*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*

*தினம் ஒரு மாற்றம்*
*(29/03/2019)*

ஒவ்வொருவருக்கும்... ஒவ்வொரு திறமை மற்றும் பன்முகத் திறமை ஒளிந்திருக்கும்.. அதை அவர்களிடமிருந்து கொண்டு வருவதற்குத் தான் சில ஊக்க சக்திகள் தேவைப் படுகிறது..

சில பெற்றோர்கள்,  நண்பர்கள் உறவினர்கள் அப்படிப்பட்டவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வர முயற்சிகளையும், வாய்ப்புகளையும் நேரடியாக அளிக்கிறார்கள். சிலருக்கு மறைமுகமாக இறைநிலையின் கருணையினால் வாய்ப்பு தேடி வரும்.. அதை பயன்படுத்தி மேலே வருவதற்கு ஒருவர் தன்னை அனுமதித்தால் போதும்.

தன்னுடைய நம்பிக்கை, பிறருடைய பாராட்டும் ஒருவருக்கு உந்து ஆற்றலாக அமையும். அதை ஒருவர் தான் முயற்சித்து அந்த நம்பிக்கை சுடரொளியை தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தால்  தன்னை முன்னேற்றிக் கொண்டு வர முடியும்.

எப்பொழுதும் யார் எந்த நல்ல விஷயத்தை செய்தாலும்.., அவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் போது அவர்களின் மூளைசெல்கள் உற்சாகமாக வேலை செய்யும். அதே அவர்களை இது சரியில்லை, நீ எப்படி முன்னேறப் போற?? நீயெல்லாம் எதற்கும் லாயக்கே இல்ல...என்பது போன்ற சொற்கள்  மனதை மட்டுமல்ல அவர்களின் மூளை செல்களின் உற்சாகத்தை தொய்வடையச் செய்து, அவர்களை முன்னேறவிடாமல் தடுத்தால் அதுவும் பாவப்பதிவாகும்.

ஒருவருக்கு வாய்ப்பு தன்னைத் தேடி வரும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நழுவ விடக் கூடாது.

எப்பொழுதும் ஒருவரின் சொற்கள் பிறருக்கு வைட்டமின்களை கொடுப்பதாக அமைய வேண்டும். மனச் சோர்வை அடையச் செய்வதாக இருக்கவே கூடாது.

இறைநிலை எப்போதும் மனிதர்கள் மூலம் தான் வாய்ப்புகளை வாரி வழங்கும். அதை பயன்படுத்துவது அவரவரின் கையில் தான் உள்ளது..

அன்புடன் ஜே.கே

No comments: