*வாழ்க வையகம்!*
*வாழ்க வையகம்!*
*வாழ்க வளமுடன்!!*
*தினம் ஒரு மாற்றம்*
*(16/03/2019)*
வாழ்க்கையை தான் பெரும்பாலானவர்கள் இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?? என்று சலிப்போடு கூறுகின்றனர்.
உண்மையில் ஒவ்வொரு மனிதப் பிறவியும் தெய்வீகத்தை நோக்கியே பயணிக்கிறது..
எதற்காக இந்த வாழ்க்கை என்று தெரியாமல் மனிதன் பயணிக்கிறான். இலக்கு எது என்பது புரிய ஆரம்பித்தவுடன் யோக வாழ்க்கையில் தேடலை ஆரம்பிக்கிறான்.
மனித மனம் உணர்ச்சிக்கும், உணர்வுக்குமான, புரிதலின் புனிதப் பயணம். இங்கே உணர்ச்சி வெல்ல தன்னை அனுமதிக்கிறாரா?? உணர்வில் பேரின்ப களிப்பில் திளைக்கிறாரா? என்பது தான் ஒவ்வொருக்குள்ளும் எழும் கேள்வி..
ஏனென்றால் ஒவ்வொருவரையும் கர்மவினை சவாலுக்கு அழைக்கும்.. பழக்கத்தின் வழி வாழப் போகிறாயா? உண்மையின் வழியான மெய்விளக்க வழி வாழப் போகிறாயா? என்று கேள்வி கேட்கும்.. மனிதன் சவாலை ஏற்பானா??
அனைவரின் சிந்தனைக்கு...
கேள்விகள்... விடைகள் ஒவ்வொருக்குள்ளேயே இருக்கும். கேள்விகளை கேட்பதிலும், வாக்குவாதம் செய்வதிலும், குறைகள் காண்பதிலும் மனதை செலுத்தினால்... அதன் பக்கமே ஒருவர் ஈர்க்கப்படுவார்.. விடைகள் அவர்களை நெருங்காது.. இதனால் தான் பலபேர் வாழ்க்கையை புரியாத புதிராகவே எதிர் நோக்குகின்றனர். தீர்வுகளை மட்டுமே ஒருவர் சிந்திக்கப் பழகினால் விடைகளும், விளக்கங்களும் தானாகவே வந்து சேரும்.
மனவளக்கலை பயிற்சி எளிமையாக, மகிழ்ச்சியாக, அமைதியாக வாழ வாழ்க்கைப் பாதையை காட்டுகிறது.
அன்புடன் ஜே.கே
No comments:
Post a Comment